பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக விழாக்கள் 4 I.

“கையாத மனத்தினனை கைவிப்பான் இத்தெருவே ஐயா உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணுரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே என்ற திருப்பாடலால் தெரிந்துகொள்ளலாம்.

இத்தகைய விழாக்கள் ஊர்தோறும் கொண் டாடப்பட்டது என்பதைத் திருமுருகாற்றுப்படை "ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவு என்று செப்பு கிறது.

திருவிழாவில் இறைவன் சிறப்புறத் திகழ்ந்து ஆண்டுத் தன்னை வெளிப்படுத்தித் திகழ்வன் என்பதை யும் திருமுருகாற்றுப்படை,

'ச்ாறயர் களத்து வீறுபெறத் தோன்றி" என்னும் அடி அறிவித்து கிற்கிறது. இவ்வாறே சிலப் பதிகாரமும் சாறயர் களத்தில் வீறுபெறத் தோன்றி" என்று மொழிகிறது.

இன்னோன்ன குறிப்புக்கள். நந்தம் செந்தமிழ் நூல்களில் பலவாறு குறிப்பிட்டுள்ள அருமை பெருமை களுக்கிணங்கப் பாலரு வாயராம் ஆளுடைப்பிள்ளையார் திருமயிலைப் பதிகத்தில் அக்கோயிலில் இடையீடின்றி கடங்துவந்த திருவிழாக்களைக் குறிப்பிட்டே பாடி யுள்ளார்.

அப்பதிகம் அங்கம் பூம்பாவை என்பாள் இறந்து எலும்பாகிக் கிடங்த கிலேயில் அவளே உயிர் பெற்று எழுமாறு செய்யும் பேரருள் திறத்தால் பாடப்பட்டது. இது பூம்பாவைக்காகவே பாடப்பட்டது என்பது திருக்