பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கட்டுரைக் கொத்து

படிச் செய்திருக்கின்றனர் என்பதை அழகுற நம் வள்ளுவர் அறிவித்துள்ளார்.

பனமொத்த காதலர்கள் தனித்து உரையாடிக் கொண்டிருந்தனர். அந்தச்சமயம் தலைமகனுக்குத் தும்மல் வங்தது. தும்மினன். தும்மினபோது வாழ்த்துக் கூறுதல் நம் தமிழர் மரபு. அம்மரபுபடி தலேவியும் வாழ்த்தினள். அப்படி வாழ்த்தியவள் உடனே மனம் மாறி அழத் தொடங்கிள்ை. பாவம் தலமகனுக்கு ஒன்றும புரியவில்லை. என்ன இது 1 கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல ஆய்விட்டதே ' என்று எண்ணி, தன் காதலி அழுததற்குக் காரணம் அறிய வேண்டி, என் உயிர் அனைய இன்பே ஏன் அழுகின்ருய்? நான் தும்மினதில் என்ன தவறு ? என்று அன்பு கலந்த மொழிகளால் கேட்டனன். தலைவியும் தான் அழுதமைக் குக் காரணம் கூறுவாளாய் அன்பரே, ர்ே என்னேத் தவிர்த்து வேறு யாருடனே உறைந்து வருகின்றீர்! அத்தகையாள் கினேவு இப்போது வர, நீர் தும்மினர். அன்புடையார் கினேவு வரும்போது தும்மல் வருதல் இயல்புதானே ? ஐயோ! நம் காதலர்க்கு வேற்று மாதரும் ஏற்பட்டு விட்டனரே என்ற துக்கமே என்னை அழச் செய்தது' என்றனளாம். இந்தக் கருத்துடைய குறள்தான்.

வழுத்தினுள் தும் மினேன் ஆக அழித்து அழுதாள்

யார்உள்ளித் தும்மினிர் என்று'

என்பது.

இதன்பின் தலைமகன் தன் காதலியிடம் தான் அவளைத் தவிர்த்து வேற்றுமாதர் எவரிடமும் வேட்கை