பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கட்டுரைக் கொத்து

இல்லறத்தினை இனிதின் நடத்தி வந்தனர். இங்ங்ணம் கடத்தி வருகையில், தக்லமகனுக்கு அவனது நண்பன் ஒரு புது இல்லம் அமைத்து, அப்புது வீட்டிற்கு கன் ள்ை குறித்துப் புகும் விழா காரணமாக ஓர் அழைப் பிதழின அனுப்பினன். பழங்காலத்தில் புது இல்லம் அமைப்பவர், அகத்தும் புறத்தும் சித்திரங்களாலும் சிற்பங்களாலும் அழகுபடுத்தி அமைப்பது வழக்கம். அத்தகைய புது அகம் புகும் அழைப்பு விழாவிற்குச் செல்ல எண்ணிய தலைமகன், தான் தனித்துச் செல்ல எண்ணுதவனய் மனையாளையும் உடன் வரும்படி கூறினன். ஆனல், அத்தலைமகள் தான் வர இயலாது என்று கூறிவிட்டனள். சரி, ஏதோ வீட்டில் பல அலுவல்கள் இருக்கின்றன. அதன்காரணமாக அவள் வருதற்கு இல்லே போலும் ' என்று எண்ணி, மேலும் அவளே வற்புறுத்தாது, தான் போய்வருவதாகக் கூறிப் புறப்பட்டனன். தன் கணவரும் அவ்விழாவிற்குப் போதல் கூடாதென்ற தடை உத்தரவு போட்டனள் இல்லக்கிழத்தி. தலைமகனுக்கு ஒன்றும் புரியவில்லே. தானும் வர இயலாது; தன் காதலரும் போகக்கூடாது என்றுதலேமகள் கூறினுள் என்ருல், அதில் ஏதோ ஒரு சீரிய நோக்கம் இருக்கவேண்டும் என்பது தெரிகிற தன்ருே ? எனவே, அழைப்பினைப்பெற்ற தலைமகன் தன் வாழ்க்கைத்துணையாளே நோக்கி, ‘அன்பே, தோன் வர மறுத்தாலும்,யான் போவதையும் தடைசெய்யலாமோ? .ே இவ்வாறு தடை செய்ததற்குக் காரணம் யாதோ ? என்று வினவியபோது, அவள் விடை இறுத்ததாகக் கற்பனை செய்து மாயூரம் வேத நாயகம் பிள்ளை அவர்கள் தாம் பாடிய "நீதிமஞ்சரி என்னும் நூலில் பாடியிருக்கும் பாடலேப் பாருங்கள். அது,