பக்கம்:கட்டுரைப் பத்து.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிற் கச்சி மாண்பு கல் தோன்றி மண் தோன்றுக் காலத்தே வாளோடு முன் கோன்றி மூத்த குடி எனப் புறப்பொருள் வெண்பா மாலைசிறப்பித்துக்கூறியபடி, மிகப்பழம் பெருங்குடிமக்கள் நம் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். அறிவு நிறைந்த அப் பழங்குடி மக்கள் வாழ்விலும் நாகரிகத்திலும் கலை சிறந்த வர்களாய் விளங்கிய காலத்துத் தம் நாட்டைத் தாமே ஆண்டார்கள். அவ்வாறு ஆண்டவர்கள் தலே சிறந்த நகரங்களே ஆக்கிக்கொண்டனர். முடியுடை வேந்தர் மூவரும் தமிழ் நாட்டை முப்பிரிவாகப் பிரித்து ஆண்டனர். அவரவர்கட்குத் தனித் தனித் தலைநகரங்களும், குடை, இலச்சினே, மாலை முதலியனவும் அமைந்திருந்தன. கய லோங்கிய இமயநெற்றியில், அயலோங்கியபுலியும் வில்லும் என அவர்தம் முக்கொடிகளும் புகழப்பட்டுள்ளன. இமயம் வரை உள்ள நாடுகளை வென்று முப்பெரு வேந்தரும் தத் தம் இலச்சினைகளை இட்டனர் என்பது இதல்ை தெரிகிற தன்ருே பாண்டியர் தமிழகத்தின் தென் கோடியையும், சேரர் மேற் பக்கத்தையும், சோழர் பிற இடங்களையும் தமதாக்கி ஆண்டுவந்தனர். சோழர் தலே நகரங்கள் ஒரு சில சிறந் தனவாக விளங்கின. பல நாட்டு மக்களும் பண்டம் பகர்ந்து வந்த வளஞ்சான்ற காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்ட பிறகு சோழர் உள்நாட்டு நகரங்களைத் தலே நகர்களாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். அவற் அறுள் ஒன்றுக விளங்கியது காஞ்சிப் பதியாகும். கச்சியானது உண்டான விதத்திற்குப் பல காரணங் கள் கூறப்பட்டுள்ளன. காதளவிலே கதைகளாக உள் ளன. சில. சோழ மன்னன், நாக கன்னிகை மூலம்பெற்ற இளந்திரையன்' என்னும் இளவல் கடலில் மூழ்கினுன்