பக்கம்:கட்டுரைப் பத்து.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதைக் கேட்டபின், மனமுடைந்து தான் செய்து வந்த இந்திர விழாவை மறந்தமையின், காவிரிப்பூம் பட்டினம் கடலால் கொள்ளப்பட்டது என்றும், கடலில் வீழ்ந்த இளந்திரையன் கரை சேர்ந்து, காஞ்சி கண்டு, அதைத் தலைநகராக்கி அரசியல் நடத்தின்ை என்றும் கூறப்படுகின்றது. காஞ்சி மரங்கள் நிறைந்த காடாக இருந்தமையின், இதற்குக் காஞ்சி என்னும் பெயர் உண் டாயிற்று என்றும் அறிகிருேம். இளந்திரையனுக்குத் தொண்டைமான் என்ற பெயர் இருந்ததென்றும், அவன் ஆண்டகால் இந்நாடு தொண்டைநாடு என்று அழைக்கப் பட்ட தென்றும் ஒரு வரலாறு உண்டு. இக்காஞ்சி என்னும் பெயர் வழக்கினே நோக்குவாம். இன்று இது காஞ்சிபுரம் என்று அழைக்கப்படுகின்றது. இது பழைய காலத்தே காஞ்சி யென்றும் கச்சி என்றும் அழைக்கப் பட்டதாக இலக்கியங்கள் சான்று பகர் கின்றன. பிறநாட்டு மக்கள் தமிழகத்தில் குடியேறித் தத்தமது நாகரிகம் முதலியவற்றைப் புகுத்திய காலத்து, ஊர்ப்பெயர்களையும் உருமாறச் செய்தனர். வடமொழி மிகுதியாகக் கலந்த காலத்து, ஊர்ப் பெயர்களே வட மொழிப் பெயர்களாக மாற்றினர். மயிலாடு துறை என் லும் அழகிய பெயரை மாயூரகிரி என ஆக்கிப் பிறகு மாயவரம் என வழங்கியது போன்றும், திருமறைக்காடு என்பதை வேதானியம் என வழங்கியது போன்றும், காஞ்சியையும் வடமொழிப்பெயராக்க முயன்றனர். ஆனல் அதற்கென வடமொழிப் பெயர் காணு வகையினராய், காஞ்சி என்ற தமிழ்ப் பெயரோடு, புரம் என்ற வட மொழிப் பெயரைச் சேர்த்து வழங்கினர். அதன் பிறகு இது காஞ்சிபுரம் என வழங்கலாயிற்று. தென் இந்திய இருப்புப் பாதையார் அதைக் காஞ்சீவரம்' என ஆக்கி னர். இம்மாறுபாடு எல்லாம் நீங்கித் தமிழ்ப்பெயர் தழைத் தோங்குவதாக. நிற்க, இக்காஞ்சி நகரம் பழம் பெருஞ் சிறப்பு வாய்ந்தது. இக் காஞ்சி அமைப்பைப் பற்றியும், அழகைப் 2