பக்கம்:கட்டுரைப் பத்து.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடு ஏற்றமுறவேண்டும். தென்குமரி வடபெருங்கல் இடை யுள்ள இந்தியநாடு எங்கலமும் பெறவேண்டுமென்பதுசொல் லாமலே அமையும். போருக்குப் பிற்காலத்தே அரசிய லார் கல்வி, கைத்தொழில், வாணிபம், நலத்துறை முதலிய அனைத்து நெறியிலும் ஊக்கங்காட்டி அவைகள் உயர்ந் தோங்கவழி கோலி வருவது கண்டு உளத்தே சிறிது மகிழ்வுயிறக்கின்றது. இந்திய நாட்டுக்கிராமங்களெல்லாம் முன்னேறவேண்டும். அதற்கு அவசியமாக வேண்டுவது கல்வியும், கைத்தொழிலுமேயாம். வருங்கால இந்தியா எங் நலனும் பெற்றுச் சிறக்க என வாழ்த்துதும் ! இங்கிலையில், உலகைப்பற்றியும் சிறிது சிந்தித்தல் வேண்டும். போர் விரைந்து நடைபெறுகின்றது. கொடி யோர் பலமெலாம் ஒடுக்கப்படுகின்றது. உலகமெங்கனும் சமாதானம் நிலவ வேண்டும் என்று எல்லா மக்களும் விரும்பவேண்டும். போர் உலகிடை இருந்தேதான் தீரும் எனச் சிலர் எண்ணினும், இல்லாது செய்தலும் கூடும். நல்லார் மனம் விரும்பின் எல்லாம் இயலும். உலக நல்ல வர் எல்லாம் ஒருங்குகூடி உலகை இன்ப உலகாக-அன்பு உலகாக - உண்மை உலகாக - உணர்ச்சி உலகாக ஆக்கு வார்களாக அவர்தம் நன்முயற்சிக்கு இறைவனும் அருள் செய்வான். எந்நாடும் நன்னடாக விளங்கும். பொன் னுலகைப் புவியில் படைக்கலாம். அத்தகைய பொன்ள்ை விரைந்து புலர்க என வாழ்த்துகின்றேன். எங்கும் இன் பம்'இயைக! வாழ்க என்றும் வளஞ்சால் தமிழ்மொழி உலகிடை என்றும் ஓங்குக உயர்வே! 84