பக்கம்:கட்டுரை வளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமாயணப் போர்க்களங்கள் A II

கேட்ட வாலி, மன அமைதி பெற்று, அங்கதன்’ என்னும் தன் மகனை இராமனுக்கு அடைக்கலமாக்கி விண்ணுல கெய்தினான்.

இராமாயணத்தில் அமையும் முக்கியமான போர்க் களம் இலங்கைப் போர்க்களமேயாகும். எழுபது வெள்ளம் சேனை யோடு இராமன் இலங்கைமேற் படையெடுத்தான். இது கேட்ட இராவணன் போரை விரும்பி யெழுகின் றான். வீடணன்’ இராமனிடம் அடைக்கலம் புகுகின்றான். இராமன் வாலி மைந்தன் அங்கதனை இரா வணன் பால் துாது விடுக்கின்றான். அதனையும் இரா வணன் பொருட் படுத்த வில்லை.

எனவே, போர் தொடங்கிற்று. வானர சேனையும் அரக்கர் சேனையும் மோதிக்கொண்டன; பெரும்போர் விளைத்தன. வடக்கு வாயிலில் வானர சேனையைச் சிதைத்த. ‘ வச்சிர முட்டி’ எனும் அரக்கனைச் சுக்கிரீவன் சிதைத்தான். கிழக்கு வாயிலில் கும்பானுவும், தெற்கு வாயிலில் சுபாரிசனும், மேற்கு வாயிலில் துன்முகனும் இறந்தொழிந்தனர். நாற்றிசையிலும் நிகழ்ந்த போர்ச் செய்தி கேட்ட இராவணன் தானே தேர் ஏறிப் போர்க் களம் புகுகின்றான். துாதுவர் மூலம் இச்செய்தியினை அறிந்த இராமன் மகிழ்ந்து, போர்க்கோலம் பூண்டு. அவன் எதிர் சென்றான். இராவணனின் வில் நாண் ஒலி கேட்டு வானரப்படைகள் பயந்து ஓடின. முதலில் சுக்கிரீவனும், அவனை அடுத்து அனுமனும் இலக்குவனும் போர்செய்து சிறிது தளர்கின்றனர். அது போது அனுமன் வேண்டுகோட்படி, அனுமன் தோளில் ஏறி இராமன் இராவணனோடு வெம்போர் விளைத்தான். இராமன் விட் ட வாளியால் பலர் மடிகின்றனர் இராமன் விட்ட அம்பால் இராவணன் மணிமுடி இழந்து நாணி நிற் கின்றான். அதுபோது அறத்தை நிலை நிறுத்த வந்த அண்ணல் அரக்கர் கோமானை நோக்கிப் பின்வரும் உரை பகர்ந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/113&oldid=1377609" இலிருந்து மீள்விக்கப்பட்டது