பக்கம்:கட்டுரை வளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IIO கட்டுரை வளம்

‘கோவியல் தருமம் உங்கள் குலத்துஉதித் தோருக்கெல்லாம். ஒவியத்துஎழுதவொண்ணாஉருவத்தாய்! உடைமை அன்றோ? ஆவியைச் சனகன்பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த

தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனைபோலும் செய்கை:

-கம்ப, கிட்கி, வாலி : 78

“இருவரும் பொரும்பொழுது மறைய நின்று என் மேல் அம்பெய்தது தவறு; தருமமும் அன்று’ என்றும், சூரிய மரபிற்குக் களங்கம் விளைத்து விட்டாயே என்றும் வாலி கூறி, வாலியைப் படுத்தாய் அல்லை; மன் அறவேலியைப் பிரித்தாய்!” என்று இறுதியில் உரைத்தான். இராமன் தன் செயல் சரியென்று தக்க ஏதுக்களை எடுத்துக் காட்டி மொழிந்தான். ‘தம்பி மனைவியைத் தகாத வழியில் அடைந்தது தருமச் செய்கையன்று,’ என்பதனை,

‘தருமம் அன்றிது எனும்தகைத் தன்மையும்

இருமையும் தெரிந்து எண்ணலை, எண்ணினால் அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ?

-கம்ப, கிட்கி, வாலி : 187

என்று குறிப்பிட்டான். இதனைக் கேட்ட வாலி, தான் செய்த செல்கை தன் மரபிற்கு ஏற்றதே என எடுத்துக் காட்டினான் வாலியின் கூற்றை இராமன் மீட்டும், ‘மறைந்து நின்று அம்பு எய்தது ஏன்? எனக்கேட்க, இளையவனாம் இலக்குவன் ‘முன்பு நின் தம்பி சுக்கிரீவன் இராமனை அடைக்கலம் புக, அதனை இராமன் ஏற்று வாலியை மடிவிப்பன்!” என்று உறுதி கூறினான். ‘இராமன் உன் எதிரில் வந்தால், நீ அன்பிற்குருகி இராமனைச் சரணடைந்தால், சுக்ரீவனுக்கு இராமன் தந்த சத்தியம் தவறிப் போய்விடுமே என்றுதான் இராமன் மறைந்திருந்து உன்மேல் அம்பு எய்தான்’ என்றான் இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/112&oldid=1377600" இலிருந்து மீள்விக்கப்பட்டது