பக்கம்:கட்டுரை வளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

கட்டுரை வளம்

 வேண்டும் என்று அறிஞர் கூறுவர். ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப, என்ற தொல்காப்பிய நூற்பாவாலும், தொல்காப்பியனார் காலத்திலேயே இத்தகைய பிள்ளைத்தமிழ் நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. அக்காலத்தில் வழங்கிய அந்நூல்கள் பிற்காலத்தில் அழிந்துபட்டிருக்க வேண்டும். இதுபோன்ற எத்தனையோ நூல்கள் தமிழில் கிட்டாமற்போய்விட்டன.

முதலில் பிள்ளைகளுக்கு - குழந்தைகளுக்கு - இந்தப் பிள்ளைத்தமிழ் நூல்கள் சிறப்பிடம் தருவதனைப் பார்க்கிறோம். 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்பாாகள். இதுபோன்றே 'குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். பரலோக அரசு அவர்களுடையது’ என்ற ஏசுபெருமான் வாக்கும் குழந்தைகளுக்கு எத்தகைய சிறந்தஇடத்தைக் கொடுக்கவேண்டும் என்பதனைத் தெளிவாக்கும். குழந்தையின் இதயம்கள்ளங்கரவு அற்றது; கரவு என்பதையே அறியாத வெள்ளை உள்ளத்திற்கு உரிமையானவர்கள் குழந்தைகள். எனவேதான், கடந்த ஞானியரும் கடப்பரோ மக்கள் மேல் காதல்!” என்றார்கள். நம்முடைய தெய்வப் புலவர் திருவள்ளுவரும் பேறுகளில் சிறந்தபேறு, குழந்தைகளைப் பெறுவதே என்றும், அமிழ்தத்தைக் காட்டிலும் இனிமையானது குழந்தைகள் தங்கள் கைகளை இட்டுத் துழாவிய கூழ் என்றும், யாழைக் காட்டிலும் குழலைக் காட்டிலும் செவிகளுக்கு இன்பம் அளிப்பன அவர்களுடைய மழலைப் பேச்சுகளே என்றும் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு’

-திருக்குறள் : 60 ‘மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’

--திருக்குறள் : 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/122&oldid=1382629" இலிருந்து மீள்விக்கப்பட்டது