பக்கம்:கட்டுரை வளம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் பா நலம் 137

‘தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்”

-தேசிய கீதங்கள், தமிழ் : 4

என்று தெய்வ உலகினையும் படைக்கும் தெள்ளு தமிழின் மேன்மையினைத் தெளிவுபடுத்துகின்றார். தேமதுரத் தமி ழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல், ஆதிசிவன் பெற்றமொழி, அகத்தியன் இலக்கணம் செய்து தந்த மொழி, ஆரியத்திற்கு நிகராய் அமைந்த மொழி கிளைத்துத் தழைக்கும் என்கிறார். தமிழில் புத்தம் புதிய நூல்கள் எழவேண்டும்.” என்கிறார். பஞ்சபூதங்களின் செயல்களைக் குறிக்கும் விஞ்ஞான நூல்கள் விளக்கமுறுதல் வேண்டும். என்கிறார். எட்டுத்திக்குகளிலும் சென்று கலைச்செல்வங்களைக் கொண்டுவந்து குவித்தல் நந்தம் பொறுப்பு’ என்று நயமுற நவில்கிறார். மறைவாக நமக் குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை’ என்று பழைமை பாராட்டியே சோம்பித்திரியும் நம்மை இடித்துரைத்தும், புத்தம் புதிய தமிழுலகினை - திறமை யான புலமை காரணமாக வெளி நாட்டார் வணக்கம் செய்யும் புதிய தமிழுலகினை-உருவாக்க வேண்டுவதன் பொறுப்பினை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார்.

அடுத்து, மனித இனத்தின்மீது மாறாத பற்றுக் கொண்டவர் பாரதியார். ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள்; உலகின்பக்கேணி என்ற அடிகளில், உலக மக்கள் அனைவரையுமே ஒரு கூட்டமாக, ஒரு சமுதாய மாக எண்ணிப் பார்க்கும் பெருநோக்கினைக் காணலாம். அம்மட்டோடன்றி ஆறறிவு படையாத அஃறிணை உயிரினங்களையும் நம்மோடு சேர்த்துக் கவிஞர் கவிதை வெறிகொண்டு பாடுகிறார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/139&oldid=1382172" இலிருந்து மீள்விக்கப்பட்டது