பக்கம்:கட்டுரை வளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் பா நலம் I 39

பொதுமை வேட்கை பொலியும் கவிஞர். நிலவொளி பாயும் சிந்து நதியிலே, சேரநாட்டின் எழில் இளமங் கையர் அழகுப் படகினிலே அமர்ந்திருக்க, இனிமையான தெலுங்கு மொழியில் இன்பப் பண்ணிசைத்துத் தோணிகளோட்டி வரலாம்,’ என்று ஆசை பொங்கக் கூறுகிறார் :

  • சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேரன் னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்

தோணிக ளோட்டிவிளை யாடிவருவோம்’

-தேசிய கீதங்கள், பாரத தேசம் : 5

“வடக்கே காஷ்மீரம் தொட்டுத் தெற்கே கன்னியா குமரிவரை வாழ்கின்ற மாந்தர் அனைவரும் ஒரு குலமாய், ஒரு நிறையாய், ஒரு விலையாய், எல்லாரும் இந்நாட்டு மன்னராய் வாழ வேண்டும்’ என்பது அவர்தம் பேராவல். அவர் கனவு காணுகின்ற புதிய சமுதாயத்தில் ஒருவர் உணவை ஒருவர் பறியாமல், மனிதர் நோக மனிதர் பாராமல், தனியொருவன் தன் உணவுக்குப் பிறரை எதிர் பாராமல் வாழ வேண்டும்’ என்று கூறி,

‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடைமை ஒப்பிலாத சமுதாயம்

உலகத்துக் கொருபுதுமை-வாழ்க !

-தேசிய கீதங்கள், பாரத சமுதாயம் : 6

என்று புதிய சமுதாயத்தினைப் படைத்துக் காட்டுகிறார். இதனோடு கவிஞரின் நனவாகவேண்டிய கனவு நிற்க வில்லை. மேலும் அவர் உள்ளம் விரிந்து பரந்து செல் கின்றது. “சேதுவை மேடுறுத்தி வீதிசமைத்துச் சிங்களத் தீவிற்குப் பாலம் அமைப்போம்!” என்கிறார். வங்கத்தின் நீர்ப் பெருக்கை மையத்து நாடுகளுக்காகத் திருப்பிவிட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/141&oldid=1382182" இலிருந்து மீள்விக்கப்பட்டது