பக்கம்:கட்டுரை வளம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் பா நலம் 14 I

நாட்டிற்கு அடுத்த நிலையில், மனித சமுதாயத்தின் ஒரு பாதிப்பகுதியான பெண்டிர் சமுதாயம் முன்னேற வேண்டும் என் பதிலே பாரதியாருக்குப் பெருவேட்கை இருந்தது. ‘பெண்ணை அடிமையாக நடத்தியவர்கள், ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணி யிருந்தவர்கள் மாய்ந்துவிட்டார்கள்’ என்று கூறிப் புதிய பெண்மையினைப் போற்றி வரவேற்கின்றார். நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு முதலிய நற்பண்புகளின் உறைவிடமாகப் புதிய பெண்ணுலகத் தினைக் காணுகின்றார். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், வேதம் படைப்பதும், நீதிகள் செய்வதும், சாதம் படைப்பதும், தெய்வசாதி படைப்பதும் ஆன செயல்களைச் செம்மையாய் நடத்துதல் இனி அவர் தம் சீரிய அறப் பணிகளாகும் காதலன் ஒருவனைக் கடிமணம் புரிந்துகொண்டு அவனுக்கு எல்லாத்துறைகளிலும் துணை நின்று, முன்னையினும் சிறக்கப் பெண்ணினத்தைப் பேணி வளர்ப்போம் என்று புதுமைப் பெணகள் முழக்கஞ் செய் வதாகப் பெண்கள் விடுதலைக் கும்மி பாடியுள்ளார் பாரதியார்.

‘காதலொருவனைக் கைப்பிடித் தேஅவன்

காரியம் யாவினும் கைகொடுத்து

மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்

மாட்சி பெறச் செய்து வாழ்வமடி !’

-பல்வகைப் பாடல்கள், பெண்கள் விடுதலைக் கும்மி : 8

இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணற்றுப் பெருகிய இந்நாட்டிலே, கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றிக் கிடைக்கும் இந்நாட்டிலே, தொழில் துறை வளர்ச்சி குறைவாக இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்த வர் பாரதியார். எனவே இரும்பைக் காய்ச்சி உருக்கி, எந்தி ரங்கள் செய்து கரும்பைச் சாறு பிழிந்து, கடலில் மூழ்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/143&oldid=1382200" இலிருந்து மீள்விக்கப்பட்டது