பக்கம்:கட்டுரை வளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 கட்டுரை வளம்

மலைவாழ் மகளிர் தினைப்புனங்களில் கிளியோட்டித் தினைப்புனத்தினில் விளைந்த முற்றிய தினைக்கதிர்களைக் காத்தனர் என்பது சங்க இலக்கியத்தில் பலவிடங்களில் பேசப்படுகின்றது.

“சுனைப்பூக் குற்றுத் தொடலை தை இப் புனக்கிளி கடியும் பூங்கட் பேதை’

-குறுந்தொகை, 14 1: 1-2

என்று சுனைப்பூவினைப் பறித்து மாலை தொடுத்தலும், தினைப்புனத்தில் கிளி கடிதலும் மலைவாணர் மகளிரின் வினையாட்டுகள் எனக் குறிப்பிடுகின்றது. பொதுவாக இளமகளிர் அக்காலத்தே கவலையிற் றோயாமல் எஞ் ஞான்றும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் என் பதனை, நற்றினைப் பாடல் ஒன்று கொண்டு அறியலாம்.

“விளையா டாயமொடு ஓரை யாடாது இளையோர் இல்லிடத் திற்செறித் திருத்தல் அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம்மெனக் குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப் பொங்கிவரு புதுநீர் நெஞ்சு ண ஆடுகம்’

-நற்றிணை 68: 1-5

இந்நற்றிணைப் பகுதிகொண்டு, மகளிர் வீட் டின் வெளியே சென்று விளையாடாமலிருப்பது அற மாகாது என்பதும், அதனால் செல்வமும் தேய்ந்துவிடும் என்பதும் தெரிய வரு கின்றன. விளையாடும் மகளிர் கூட்டத்தினைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் சங்க காலப் புலவர்கள் ‘ஒரையாயம்’ என்றும், ‘பொய் தன் மகளிர்” என்றும் குறிப்பிடுகின்றனர். பஞ்சாய்க் கோரைப்புல் கொண்டு செய்யப்பட்ட பாவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/32&oldid=1371412" இலிருந்து மீள்விக்கப்பட்டது