பக்கம்:கட்டுரை வளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 கட்டுரை வளம்

குரிய பயிற்சியினை இக்கால விளையாட்டு வழியினி லேயே பெறுகிறார்கள் என்பதனை ஐங்குறுநூற்றின் கண் அமைந்துள்ள அழகிய பாடலொன்று (128) விளக்கு கின்றது.

இக்காலத்தும் இளமகளிர் மரத்தாலியன்ற பொம்மை கள் இரண்டனுக்கு மணமகன் மணமகள் என்ற பெயர் சூட்டி மண வினை நடத்தி மகிழ்வதனைக் காணலாம். அது போன்றே சங்க காலத்திலும் மகளிர் பஞ்சும், பட்டும் பூந்தாதும் கொண்டு தாம்செய்த அழகிய பொம்மை களுக்குப் பெயர்கள் இட்டு, பல வீடுகளிற் சென்று பிச்சை ஏற்றுவந்து, பிறர்க்கு வழங்கி, மணவிழா விளையாட்டு நிகழ்த்தினர் என்பதனைக் கலித்தொகை குறிப்பிடுகின்றது.

சிலம்பும் வளை யும் அணிந்த இளமகளிர் பொன்னாற் செய்த கழற்காய் கொண்டு, மணல் மேடுகளிலே இருந்து விளையாடுகிறார்கள் என்பதனை,

‘செறியளிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்

பொலஞ்செய் கழங்கின் தெற்றி ஆடும் (36: 3-4)

என்ற புறநானுாற்றுப் பாடற்பகுதி கொண்டு அறியலாம்.

“பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடிநீ

எய்திய பலர்க்கீத்த பயம்பயக் கிற்பதோ

சிறுமுத்த னைப்பேணிச் சிறுசோறு மடுத்துநீ நறுநுத லவரொடு கக்கது நன் கியைவதோ’

-கலித்தொகை, 59 : 16-21

சிறு மகளிர் வீட்டின் முற்றத்தில் கழங்காடுகின்றனர். * கூரை கல்மனைக் குறுங் தொடி மகளிர்

மணலாடு கழங்கு”

மகளிர் புதுப்புனலாடியும் மகிழ்கின்றனர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/34&oldid=1371433" இலிருந்து மீள்விக்கப்பட்டது