பக்கம்:கட்டுரை வளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 கட்டுரை வளம்

இவ்வாறு இருதலைப்புள்ளின் ஒருயிர் ஒக்கும்மே” என்றபடி, வாழ்வில் இணைந்து இருவரும் அன்பும் அறனும் உடைத்தாய இல்வாழ்க்கையினைப் பண்பும் பயனுமான வழியிலே நடாத்துகின்றனர். கொண்ட கணவன் குறிப்பறிந்து நடப்பவளே குலமகள் ஆவள். உலக மக்கள் நீரின்றி இயங்கவியலாததுபோலக் கொண்ட கணவனின்றிக் குலமகள் இயங்க ஒல்லாதவளாகிறாள் இதனை,

‘நீரின் றமையா வுலகம் போலத்

தம்மின் றமையா நந்தயங் தருளி’

என்று ‘நற்றிணை’ கூறும். மேலும் கணவனை’ இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்ற சிலப்பதிகாரத் தொடரும்,

“வினையே ஆடவர்க் குயிரே, வாணுதல்

மனையுறை மகளிர்க் காடவர் உயிர்’

என்ற குறுந்தொகைத் தொடரும் (135 : 1-2) இதனை நன்கு விளக்குவனவாகும். -

புறவுலகில் செயலாற்றுபவன் தலைவன். அவன் வாழ்வு அல்லலும் நெருக்கடியும் சூழ்ந்தது. ‘செய்வினை முடித்த செம்மல் உள்ளத்தோடு இல்லம் திரும்பும் கணவ னுக்கு அறுசுவை உண்டி தந்து மகிழ்விப்பது மனைவியின் முதற் கடமையாகும் என்பதனைச் சங்ககால மகளிர் நன்கு உணர்ந்திருந்தனர். தலைவியொருத்தி தன் காதற் கொழு நனுக்கு அட்டில் சமைத்து உணவூட்டிய செய்தியினைக் குறுந்தொகைப் பாட்டொன்று (166) நயமுறக் குறிப் பிடுகின்றது :

‘முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்

கழுவுறு கலிங்கங் கழாஅ துடீ இக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/42&oldid=1371503" இலிருந்து மீள்விக்கப்பட்டது