பக்கம்:கட்டுரை வளம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இசையின் தொன்மையும் வளர்ச்சியும் 7.3

‘அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை டேலும்

உளவென மொழிய இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்’

என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நூற்பாவிற்கு உரையாசிரியர் இளம்பூரணர், ‘உயிரெழுத்துகளெல்லாம் தமக்குச் சொன்ன அளவினைக் கடந்து ஒலித்தலையும், ஒற்றெழுத்துகள் தம்மொலி முன் கூறிய அளபின் நீட்டலையும், இந்நூலுட் கூறும் விளியின் கண்ணேயன்றிக் “குரல் முதலிய ஏழிசையோடு பொருந்திய நரம்பினையுடைய யாழினது இசை நூற் கண்ணும் உள’ எனச் சொல்லுவர் அவ்விசை நூலாசிரியர் என்று சொல்லுவர் புலவர்,’ என்று உரை எழுதியுள்ளமை நோக்குழித் தொல்காப்பியனார்க்கும் முன்னமே இசைத் தமிழ் வளர்ச்சியுற்று வரையறையான-கட்டுக்கோப்பான இலக்கணத்தைப் பெற்றிருந்தது என்பதை அறிகின்றோம். மேலும். தொல்காப்பியனார் பொருளதிகாரத்தின் அகத் திணையியலில் (18) கருப்பொருள்களைப் பின்வருமாறு கூறுவர் :

‘தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப’

என்று தமிழ் இசைக் கருவிகளுள் பழமையான யாழினை யும் சுட்டியுள்ளார். எனவே, இசையோடு மட்டுமன்றி இசையினை எழுப்பத் துணைகோலும் யாழும் பழமை யாய் வந்துகொண்டிருக்கிறது என்பதை அறியலாம்.

இறையனார் களவியலுரையாசிரியர், முச்சங்க வரலாற்றின் தலைச்சங்க வரலாறு கூறுமிடத்தில், அவர் களாற் (தலைச் சங்கப்புலவர்களால்) பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/75&oldid=1374849" இலிருந்து மீள்விக்கப்பட்டது