பக்கம்:கட்டுரை வளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 கட்டுரை வளம்

“புரியுமேற் சென்ற நூற்றுவர் மடங்க வரிபுனை வல்லில் ஐவர் அட்ட பொருகளம் போலும்’

-கலி, 104 : 57-5

என்ற பகுதியில் பாரதப் போர்க்களமும் உவமைகளாய் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

தமிழின் முதற்காப்பியமாம் நெஞ்சையள்ளும் சிலப்பதி காரத்தில் பாரதப்போர்- 'கடல்வணன் தேர் ஊர் செரு’ என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்த செய்தியும், அப்போரில் சேரமன்னன் பெருஞ் சோறு அளித்த சிறப்பும் குறிக்கப் பட்டுள்ளன. மேலும், கண்ணன் பாண்டவர்க்குத் தூது நடந்த அருட்செயலை அருட் கவிஞராம் இளங்கோ வடிகள்,

மடங்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர்.பால் காற்றிசையும் போற்றப் படர்ந்தா ரண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத காவென்ன காவே ! நாராய னாவென்னா நாவென்ன நாவே !

-சிலம்பு. ஆய்ச்சியர் குரவை : 37

என்று அழகுறக் குறிப்பிட்டுள்ளார்.

தேவார திவ்வியப் பிரபந்தப் பாடல்களில் பாரதக் கதை நிகழ்ச்சிகள் கிளத்தப்பட்டுள்ளன. பிற்கால நூலாம் கலிங்கத்துப்பரணியிலும், நிகண்டு நூலாம் திவாகரத்தி லும் பாரதக்கதை நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. பிற் கால உரையாசிரியர்கள் நச்சினார்க்கினியர் தமது தொல் காப்பியப் புறத்திணையியலுரையில் ‘இராமாயணமும் பாரத மும் போல் வன இலக்கியம்’ என்றும், யாப்பருங்கல விருத்தியுரைகாரர், ‘தொன்மை’ என்றும் வனப்பிற்கு உதாரணமாகப் பாரதமும் இராமாயணமும், முதலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/98&oldid=1377354" இலிருந்து மீள்விக்கப்பட்டது