பக்கம்:கட்டுரை வளம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியங்களில் இதிகாசக் கருத்துகள் 97

பாரதமும் இராமாயணமும், முதலா யினவும் கொள்க’ என்றும் மேற்கோள் காட்டுகின்றமை, முற்கூறிய கருத் தினுக்கு அரண் செய்யும். தமிழ்ச் சாசனங்கள் கொண்டும் பாரதத்தின் பழைமையை அறியலாம். மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்ற ‘இராசசிங்க பாண்டியன் மெய்க்கீர்த்தி’ (சின்னமனுர்ர்ச் செப்பேட்டுப் பகுதி) கொண்டும் பாரதக்கதைச் செய்தி யின் தொன்மையை அறியலாம். இதுகாறும் கூறிய வற்றால் பாரதக் கதைக் குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங் களில் ஆங்காங்கே வந்துள்ளன என்பதைக் கண்டோம். இனி இராமாயணக் கதை நந்தமிழ் இலக்கியங்களில் எத்தகைய இடம் பெற்றுள்ளது எனக் காண்போம்.

‘பாரதஞ்சீ ராமகா தை’ என்ற திருவள்ளுவமாலைத் தொடர்கண்டு, சீராமகாதை” எனவும் முன்னோர் இராமா யணத்தை வழங்கினர் என்பது போதரும்.

முதற்கண் அகநானுாற்றில் வரும் ஒரு குறிப்பினைக் காண்போம்: தனுஷ்கோடிக் கடற்கரையில் ஆலமரமொன் றின் கீழ் இராமபிரான் தங்கி போர்குறித்து வானரவீரர் களுடன் ஆலோசனை செய்தார் என்றும், அதுபொழுது அவ்வாலமரத்தில் வாழ்ந்த புள்ளினங்களின் ஒலி அதிக மாகி, ஒருவர் கூறும் செய்தி மற்றொருவருக்குக் கேளாமற் போக, அவ்விடையூறு களைய இராமபிரான் தம் திருக் கைகள் காட்டி அப்பறவைகளின் ஒலியை யடக்கினார் என்றும், கடுவன் மள்ளனார்’ என்ற புலவராற் பாடப் பட்டுள்ளது.

“வென்வேற் கவுரியர் தொன்முது கோடி

முழங்கிரும் பெளவம் இரங்கு முன்துறை வெல்போர் இராமன் அருமறைக் கவித்த பல்வீழ் ஆலம் போல ஒலியவிந் தன் றிவ் வழுங்க லூரே.”

-அகம் : 70, 13 - 17 க-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/99&oldid=1377361" இலிருந்து மீள்விக்கப்பட்டது