பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bore

101

brain கூடிய எல்லைக்கோடு செல்லும் அச்சில், ஒரு பக்கம் அல்லது ஒவியத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட விளிம்புகளில் காணப்படும் கோடு அல்லது அமைப்பு.

bore : போர் : ஒரு நெகிழ்வட்டு அல்லது காந்த நாடா சுருணை போன்றவற்றின் துளையின் குறுக்களவு.

Borland C++ : போர்லேண்ட் சி++ : டாஸ் மற்றும் சாளரபயன்பாடுகளுக்காக போர்லாண்ட் நிறுவனம் உரு வாக்கிய அன்சி சி மற்றும் சி++ தொகுப்பு நுண்மென்பொருள்சாளர சி-யில் எழுதப்பட்ட விண்டோஸ் ஆணைத் தொடர்கள் மற்றும் டர்போ சி-யை ஏற்பதுடன் பிழை நீக்கவும் செய்யும்.

Borland (Borland int'l): போர்லேண்ட் : 1983இல் பிலிப் கான் உருவாக்கிய முன்னணி பி சி மென்பொருள் நிறுவனம். அதனுடைய டர்போ பாஸ்கல் கல்வி நிலையங்களிலிருந்து வெளிவந்து வணிகப் பொருளானது டர் போ சி தொழில்துறை தர அளவு கோலானது. டர்போ பாஸ்கல் மற்றும் போர்லண்ட் சி++ மூலம் சாளர பொருள் சார்ந்த ஆணைத் தொடரும் உருவாகிறது.

borrow:கடன் வாங்கு: கணித முறையில் கழித்தல் செய்யும்போதும் குறைந்த வரிசை இலக்கத்தினை உயர்த்தி அடுத்த உயர் வரிசை இலக்கத்திலிருந்து ஒன்று கழிக்கப்படுகிறது.

BOT : பாட் : Beginning Of Tape என்பதன் குறும் பெயர். ஒரு காந்த நாடாவில் பதிவு செய்வதை எந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் குறியீடு.

bottom up technique: கீழிருந்து மேல் செல்லும் தொழில்நுட்பம்.

bound:கட்டுப்பட்ட : செயலகம் அல்லது உள்ளீடு / வெளியீடு போன்ற கணினியின் எந்தப்பகுதியின் செயல் முறையாவது, கட்டுப்பட்டதாக இருத்தல். வேகமாகச் செயல்படுவதைக் கணினியின் எந்த பாகம் தடை செய்கிறது என்பதைக் குறிப்பிடுவது.

boundary : எல்லை : ஒரு கோப்பு போன்றவற்றில், நினைவகத்தில் வரையறுக்கப்பட்ட இடைவெளி. சான்றாக, ஆணைத்தொடர்கள் 16 எட்டியல் எல்லைகளுக்குள் நினைவகத்தில் வைக்கப்படும் அத்தகைய முழு நினைவு முகவரியை எப்போதும் 16ஆல் வகுக்க முடியும்.

boundary fill : எல்லை நிரப்பி : ஒரு பகுதியை நிறத்தால் நிரப்பும் செயல் முறை. எல்லை மதிப்பு உள்ள படப் புள்ளிகளால் எல்லையமைக்கப்பட்ட அனைத்துப் படப்புள்ளிகளையும் புதிய மதிப்பு (நிறம்)களால் நிரப்புதல்.

box drawing characters : பெட்டி வரையும் குறிகள் : நீட்டிக்கப்பட்ட அஸ்கியில் உள்ள பெட்டிகளை வரையப் பயன்படுத்தப்படும் குறிகளின் தொகுதி.

bpi : பிபிஐ : bit per inch என்பதன் சுருக்கம். bytes per inch என்பதற்கு BPI என்று குறும்பெயர் தரப்படுகிறது.

bps: பிபிஎஸ்: bits per Second மற்றும் bytes per Second என்பதன் குறும் பெயர், bps என்பதாகும்.

brain-damaged : மூளை பாதிக்கப்பட்ட : மோசமாக நடக்கும் அல்லது அழிக்கும் முறையில் செயல்படும் ஆணைத் தொடரைக் குறிப்பிடும் பதம்.