பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

business gra 109 bus net

வும் வழிகாட்டுவதே இதன் நோக்கங் கள். ஒரு வாராந்தர செய்தி மடலும், ஒரு ஆண்டு அறிக்கையும், வெளி யிடுகின்றது.

business graphics : வணிக வரை கலைவியல் : 1.பை (Pie) வரைபடங் கள், நீள்கட்ட வரைபடங்கள், பிரிவு படங்கள், மற்றும் பிற புலனாகும் முறைகளில் வணிகச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் விற்பனைக் கும் விலைக்கும் உள்ள வேறுபாடு. துறைவாரி விற்பனை, உற்பத்திப் பொருள் செயல்பாட்டின் ஒப்பீடு, இருப்பு விலைகள் போன்ற துறை களில் அளித்தல். 2. தகவல்களை பார்த்துத் தெரிந்து கொள்ளும் வண் ணம் காட்டக்கூடிய பயன்பாட்டு ஆணைத் தொகுப்புகளை உருவாக்குதல்,

business machines : வணிக எந்திரங்கள் : வணிக செயல்பாடுகளுடன் தொடர்புள்ள கணினிகள், சொல் செயலாக்க எந்திரங் கள், முகப்புகள் மற்றும் பிற மின்னணு, எந்திரக் கருவி கள்.

business - oriented programming language : வணிகம் சார்ந்த ஆணைத் தொடர் மொழி : வணிகப் பயன் பாடுகளில் அதிக தகவல் கோப்புகளைக் கையாளக் கூடியதாக உருவாக்கப் பட்ட மொழி.

business programming : வணிக ஆணைத்தொடர் அமைத்தல் : கணினி தீர்வுக் காக வணிகப் பிரச்சினைகளுக்குக் குறியீடு இடப்படும் கணினி ஆணைத்தொடர் அமைக்கும் பிரிவு. பொதுவாக குறைந்த கணக்கீடுகளே இடம் பெற்றாலும் ஏராளமான தகவல் உள்ளீடு வெளியீடுகளைக் கொண்ட கோப்புகளைக் கையாளக் கூடியது.

business software : வணிக மென் பொருள் : மின்னணு விரிதாள், தகவல்தள மேலாண்மை அமைப்பு கள், வணிக வரைபடசம் பளப்பட்டி ஆணைத் தொடர்கள் மற்றும் கணக் கீட்டு ஆணைத்தொடர்கள் போன்ற வணிக பயன்பாடுகளுக்காகவென்றே குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட பணித் தொகுப்புகள்.

busmouse : மின் இணைப்புத் தொகுதி; சுட்டுக் கருவி : வரிசைத் துறையில் (Port) பொருந்துவதற்குப் பதிலாக விரிவாக்க அட்டையில் பொருந்தும் மின் இணைப்புத் தொகுதி சுட்டுக் கருவி.

bus network : இணைப்புத் தொகுதி பிணையம் : மின் இணைப்புத் தொகுதி அல்லது ஒரு பொது விநி யோக வழித்தடத்தினைப் பயன் படுத்தி அனைத்து நிலையங்கள் அல்லது கணினிச்சாதனங்கள் தகவல் தொடர்பு கொள்ளும் அமைப்பு.