பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தமிழில், அறிவியல் கலைச் சொற்களை உருவாக்குவதில் பேரார்வம் கொண்டு, "அறிவியல் கலைச் சொல் களஞ்சியம்”, “மருத்துவ அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி”, “மருத்துவக் கலைச் சொல் களஞ்சியம்” போன்ற நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ள திரு.மணவை முஸ்தபா கணினி, இணையம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆங்கிலக் கலைச் சொற்களைத் தொகுத்து, அவற்றிற்கு ஏற்ற சொற்களைத் தமிழில் படைத்து, உரிய விளக்கங்களையும் வழங்கி, “கணினிக் கலைச் சொல் களஞ்சிய அகராதி” எனும் அருமையான நூலைத் தமது கடுமையான உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ளார். இக்காலகட்டத்தில் இது வரவேற்கத்தக்க, மிகுந்த பயனுள்ள பணியாகும். தகவல் தொழில் நுட்பத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள வல்லுநர்களும், தமிழறிஞர் பெருமக்களும் இந்நூலைப் பயன்படுத்தி இந்நூலில் இடம்பெற்றுள்ள கலைச் சொற்கள் மேலும் செப்பமடைந்திடத் துணை புரிந்திடின் கணினித் தமிழ்க் கலை உலகில் புகழ்பெறும்.


சென்னை - 9

18 - 10 - 1999

மு. கருணாநிதி
10