பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

carriage ret

119

carгу


carriage return (CR): நகர்த்தியைக் கொண்டுவரல் : எழுத்து அச்சிடும் பொறியில் இடது மூலையில் அடுத்த எழுத்தை அச்சிடச் செய்யும் செயல் முறை.

carrier : தாங்கி : சமிக்ஞை அனுப்பப்படுவதற்கு ஒரு எல்லை அல்லது உறையாக அமைந்து ஏ.சி. மின்சாரம் இயங்குவது. ஒரு கம்பி அல்லது குழாய் மூலம் ஒரே நேரத்தில் பல சமிக்ஞைகளை இது கொண்டு செல்ல முடியும். சான்றாக ஒரே தாங்கியில் குரல், தகவல் அல்லது ஒளிக்காட்சி சமிக்ஞைகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். ஏனென்றால், ஒவ்வொன்றும் மாறுபட்ட இடைவெளிகளில் செல்பவை.

carrier based : தாங்கி சார்ந்த : அனுப்பப்படும் தகவல்களை வைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரு நிலையான அலைவரிசையை (தாங்கியை) உருவாக்கி அனுப்பும் அமைப்பு.

carrier frequence : ஊர்தி அலை வெண் : இரும எண் (பைனரி) தகவலைக் குறியீடு செய்ய ஏற்றவாறு அமைக்க, தகவல் தொடர்புச் சாதனங்களின் இடையே பரிமாறப்படும் இடைவிடாத சமிக்ஞை.

carrier signal : தாங்கி சமிக்ஞை : செய்தித் தகவல் தொடர்புகளில் தகவல் சமிக்ஞைகளை மாற்றி அனுப்புவதற்காக ஊடகத்தில் ஏற்படுத்தப்படும் சமிக்ஞை.

carrier working : தாங்கி செயலாற்றுதல் : வீச்ச மாறுவதன் மூலம் ஒரு பேச்சை அதன் ஆரம்ப ஒலி அலைவரிசையிலிருந்து (300 முதல் 3,400) ஹெர்ட்ஸ்) உயர் "தாங்கி" அலைவரிசைக்கு மாற்ற முடியும். உலகின் பெரும்பாலான தொலைதூர தொலைபேசி அமைப்புகள் 12 அலைவரிசை குழுவையே பயன்படுத்துகின்றன. 12 குரல் அலைவரிசைகளாக மாற்றப்பட்டு 48 கிலோஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் அடங்குகின்றது. இவை 60-108 கிலோஹெர்ட்ஸ் வரை செயல்படுபவை.

carry : அடுத்து வரும் எண்; தொகு எண்; எடுத்துச் செல் எண் : 1. ஒரு பத்தியில் உள்ள இரண்டு இலக்கங்களின் கூட்டல் தொகை அடிப்படை எண்ணைவிடப் பெரியதாகவோ அல்லது சமமாகவோ இருக்கும் போது ஏற்படும் சிறப்பு நிலையைக் கொண்டுவரும் செயல்முறை. 2. கொண்டு செல்லும் இலக்கம் அல்லது அடுத்த உயர்பத்திக்குச் சேர்க்கப்படும் இலக்கம்.

carry digit : தொகு எண் இலக்கம் : கூட்டலின்போது ஒரு பத்தியிலிருந்து அடுத்ததற்குக் கொண்டு செல்லப்படும் இலக்கம். பதின்மான 'டெனரி' முறையில் 5 + 7-ஐக் கூட்டும்போது கூட்டுத் தொகை 2 ஆகவும் கொண்டு செல்லும் இலக் கம் 1 ஆகவும் வரும். இரும எண் முறையில் 1+1+0+1-க்கு கூட்டுத் தொகை 1 கொண்டு செல்லும் தொகை 1.

carry flag : தொகு எண்கொடி : மையச் செயலகத்தின் கொடி பதிவகத்தில் உள்ள துண்மிகளில் ஒன்று. பிழை நிலையைக் குறிப்பிட டாஸ் (DOS) பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.

carry register: தொகு எண்பதிவகம்; எடுத்துச் செல் பதிவகம் : சுழற்சி அல்லது கொண்டு செல்லும் செயல்பாட்டின்போது சேர்ப்பியில் விரிவாகச் செயல்படும் ஒரு துண்மியின் பதிவு. இணைப்புப் பதிவகம் என்றும் அழைக்கப்படும்.