பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

center

124

Centre for


நூறு பேர்களுக்குப்பதிலாக பல்லாயிரவர் பயன் பெறமுடியும்.

center : மையம் : தட்டச்சு செய்யப்படும் தகவலை வரியின் மையத்தில் இடம் பெறச் செய்யும் விசைப் பலகையின் பணி.

centering cone : மையப்படுத்தும் கூம்பு : 5.25 நெகிழ் வட்டை (ஃபிளாப்பி) இயக்கி அச்சாணியில் ஏற்றப் பயன்படுத்தும் சிறிய செயற்கை இழை அல்லது உலோகக் கூம்பு. இயக்கியின் கதவை மூடியவுடன், இது வட்டின் மையக் குழியில் நுழைக்கப்படுகிறது.

cent : சென்டி : நூறாவது என்பதைக் குறிக்கும் மெட்ரிக் அளவை முன் சொல். நூறு என்பதைக் குறிக்கும் ஹெக்டோவுடன் வேறுபடுத்திப் பார்க்க.

central spindle: மையச் சுழல் தண்டு.

central processing : மையச் செயல்பாடு.

central processing unit : மையச் செயலகஅலகு.

centi second : சென்டி நொடி : ஒரு நொடியில் நூறில் ஒரு பங்கு

central information file:மைய தகவல் கோப்பு : முக்கிய தகவல் சேமிப்பு அமைப்பு.

central tendency : மையப் போக்கு : எதிர்பார்க்கப்பட்ட மதிப்புகளுக்கு ஏற்றதாக தகவல்கள் அமையக் கூடிய வாய்ப்பு.

central terminal : மைய முனையம் : கணினிக்கும் தொலைதூர முனையத்துக்கும் இடையே தகவல் தொடர்பு கொள்வதற்கு இடைப்பட்ட ஊடகமாகப் பயன்படும் வன்பொருள் தாங்கி.

centralized data processing: மையப்படுத்தப்பட்ட தகவல் செயலாக்கம் : ஒரு நிறுவனம் தன்னுடைய கணினி கருவிகளையெல்லாம் ஒரே இடத்தில் வைத்திருக்கும் கோட்பாடு. கள அலுவலகச் செயல்பாடுகள் தகவல் செயலாக்கத்திற்கு இல்லாத நிலை.

centralized design : மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு : ஒரு நிறுவனத்தின் தகவல் செயலாக்க வசதிகளை, ஒரு தனி தகவல் செயலாக்கத் துறையே வழங்கும் தகவல் அமைப்பு.

centralized network configuration : மையப்படுத்தப்பட்ட இணைய வடிவம் : ஒரு மைய கணினியின் தொடர்புடன் பெரும்பாலான பணிகளைச் செய்யும் ஏற்பாடுள்ள கணினி இணையம். நட்சத்திர இணையம் என்றும் அழைக்கப்படுகிறது.

centralized processing: மையப்படுத்தப்பட்ட செயலகம் : ஒரு தனி, மைய இடத்திலிருந்து ஒன்று அல்லது மேற்பட்ட கணினிகளைச் செயலாக்கம் செய்தல். இதன் பொருள் என்ன வென்றால் தகவல் மையத்துடன் நிறுவனத்தின் அனைத்து முனையங்களையும் இணைத்து செயல்பட வைக்கப்படுகிறது என்பதே.

centred text: மையப்படுத்திய சொல்லமைப்பு : சொல்லமைவுகளை ஒரு வரியின் மையத்தில் அமைத்தல். ஒரு பக்கத்தில் இடது ஓரம் அல்லது வலது ஓரத்தில் இல்லாமல் மையத்தில் இடம் பெறும் சொல் அல்லது சொற்றொடர்.

central site : மையத்தளம் : பரவலாக்கப்பட்ட செயலாக்க அமைப்பில் முக்கிய கருவிகள் உள்ள இடம்.

Centre for Development of Advanced Computing : உயர் கணிப்பு மேம்பாட்டுமையம்:மைய அரசுநிறுவனம்.