பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

check pro

130

child


வரும்முறை. கணினி நினைவகத்தில் உள்ள ஒரு பகுதி மேலும் பதிவு செய்யப்படும் போது அங்கங்கே வைக்கப்படும் புள்ளி. கணினியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், கடைசி சோதனையிடத்திலிருந்து மீண்டும் துவக்கலாம். கடைசி சோதனையிடத்திற்குப்பிறகு நுழைக்கப்பட்டவை எல்லாம் தொலைந்து போய்விடும்.

check problem: சோதனைச் சிக்கல் : ஒரு கணினி அல்லது கணினி ஆணைத்தொடர் சரிவர இயங்குகிறதா என்பதை முடிவு செய்வதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கல்.

checksum: சோதனை கூட்டல் எண்: சோதனைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற துண்மிகள் அல்லது இலக்கங்களின் கூட்டல் தொகை. தானாக ஏற்படுத்தப்படும் விதிகளின்படி கூட்டல் நடைபெறுகிறது. தகவல் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கப் பயன்படுகிறது.

chemical collissions : வேதி மோதல்கள் : பிபிசி அக்கார்ன் அல்லது இந்திய எஸ்சிஎல் யூனிக் கார்ன்க்கான ஒரு கல்வி மென் பொருள். வரைகலை முறையில் வேதி கலவைகளில் ஏற்படும் எதிர்வினைகளின் பல்வேறு தன்மைகளை இது கூறும்.

chicklet keyboard : சிக்லட் விசைப் பலகை: விரைவாகத் தட்டச்சு செய்ய முடியாத அளவில் சிறிய, சதுர விசைகள் உள்ள விசைப் பலகை.

chief information officer : தலைமை தகவல் அலுவலர்:நீண்டகால தகவல் திட்டமிடல் மற்றும் உத்தியில் கவனம் செலுத்தி ஒரு நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்பப் பணிகள் அனைத்தையும் மேற்பார்வையிடும் ஒரு மூத்த நிர்வாகப் பதவி.

chief programmer: தலைமை ஆணைத் தொடராளர் : ஒரு ஆணைத் தொடர் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர். திட்டம் முழுவதும் வெற்றிகரமாக முடிக்கப்பட வேண்டும் என்பதற்காக முழுப் பொறுப்பையும் ஏற்றிருப்பவர்.

chief programmer team : தலைமை ஆணைத்தொடராளரின் குழு:கணினி ஆணைத்தொடர் எழுதுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஒரு தலைமை ஆணைத் தொடராளர், ஒரு மாற்று ஆணைத் தொடராளர், ஒரு ஆணைத்தொடர் நூலகர் / செயலாளர் உள்ளிட்ட குழுவின் தலைமையை ஒரு தொழில் நுட்ப ஆணைத் தொடராளர் ஏற்றிருப்பார். தேவைப்பட்டால், இரண்டு அல்லது மூன்று கூடுதல் உறுப்பினர்கள் சேர்க்கப்படலாம் அல்லது வல்லுநர்கள் ஆலோசனை பெறலாம். ஆணைத் தொடர் எழுதுவதை ஒரு தனியார் கலையாகக் கருதாமல் அதை ஒரு பொறியியல் தொழிலாக மாற்றுவதும், திறமைமிக்க படைப்பாளி தன் படைப்புத் திறனில் கவனம் செலுத்தி ஊக்கம் அளிப்பதும் இதில் முக்கிய கோட்பாடுகளாகும்.

child : குழந்தை சிறு பதிவேடு: ஏற்கனவே இருக்கும் பெற்றோர் ஏடு ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பதிவேடுகளின் உள்ளடக்கங்களைச் சார்ந்து உருவாக்கப்படும் தகவல் பதிவேடு.

child process : குழந்தைச் செயல் முறை; சிறு ஆணைத்தொடர் : வேறொரு ஆணைத்தொடரின் (பெற்றோர்) கட்டுப்பாட்டில் இருக்கும் போதே இயங்கும் ஒரு ஆணைத் தொடர்.