பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data mod

199

data poi


உருமாதிரிகளை உருவாக்குவதற் கான ஒரு செய்முறை. ஒரு தகவல் உருமாதிரிக்கான வடிவமைப்பு நெறி முறைகளை அடையாளங் காணல்.

data module : தகவல் தகவமைப்பு : முத்திரையிட்ட, அப்புறப்படுத்தத் தக்க வட்டுத்தொகுதியை குறிக்கும் சொல்.

data medium : தகவல் ஊடகம் : பொருள் ஒன்றில் அல்லது அதன் மீது தகவல்களைப் பிரதிபலிக்கும் குறிப்பான இயற்பியல் மாறுதல்களுக்கு இடமளிக்கும் பொருள். எடுத்துக்காட்டு: காந்தவட்டு அல்லது காந்த நாடா.

data model : தகவல் மாதிரி; தகவல் படிமம்: தகவல் வடிவங்களை அல்லது அவ்வடிவங்கள் மீதான நட வடிக்கைகளை விளக்குகிற முறையான மொழி. இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தகவல் விவரணைமொழி; இரண்டு, தகவல் திருத்த மொழி.

data movement time: தகவல் இயக்கம் நேரம்; தகவல் இடப்பெயர்வு நேரம் : ஒன்றை இடமாற்ற எடுத்துக் கொள்ளப்படும் நேரம் அல்லது ஒரு வட்டு ஒன்றின் வழியில் படிக்கும் அல்லது எழுதும் தலைப்பகுதி முறையாகப் பொருத்தப்பட்டதும் எடுத்துக்கொள்ளும் நேரம்.

data name : தகவல் பெயர் : மாறக்கூடியதன் பெயர், தகவல் மதிப்பீடு ஒன்றைக் காட்டக்கூடியது. எடுத்துக்காட்டு 3.14159 -க்கு pi என்று குறிப்பிடப்படுகிறது.

data network : தகவல் இணையம்: தகவல்களை அனுப்புகிற செய்தித் தொடர்பு இணையம்.

data organization : தகவல் அமைப்பாக்கம்: தகவல்களை அவற்றின் மூல வடிவத்திலிருந்து எந்திரம் உணர்ந்தறியக் கூடிய வடிவத்திற்கு மாற்றுதல்.

data origination : தகவல் தோற்றம் : தகவலை அதன் ஆதி வடிவிலிருந்து எந்திரம் உணரக்கூடிய வடிவத்துக்கு மாற்றுதல்.

data packet : தகவல் சிப்பம் : தகவல் வரிசைகளை திறன்மிகு சிப்பங்களாக அனுப்புவதற்கான வழிகள். தவறுகளைக் களைவதற்கான நெறிமுறைகளைக் கொண்டதாக அமையும்.

data pen : தகவல் பேனா : பட்டைகள், முகப்புச் சீட்டுகள் ஆகியவற்றில் காந்தமுறையில் குறியீடாகப் பதிவு செய்யப்பட்ட தகவல்களைப் படிப்பதற்கான, கையினால் இயக்கக் கூடிய, ஒரு காந்த நுண்ணாய்வுச் சாதனம்.

data phone : AT&T நிறுவனத்தின் வணிக இலச்சினை. பெல்முறைமையில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்ட தகவல் தொகுப்புகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. இவை தொலைபேசி இணைப்பு மூலம் தகவல்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படுகிறது.

data planning : தகவல் திட்டமிடல் : தகவல் ஆதார மேலாண்மையில் கவனம் செலுத்தும் ஒரு கூட்டுத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பணி. நிறுவனத்தின் தகவல் ஆதாரத்திற்காக ஓர் ஒட்டுமொத்தத் தகவல் கொள்கையினை வகுப்பதையும், தகவல் கட்டமைப்பை உருவாக்கு வதையும் இது உள்ளடக்கும்.

data point : தகவல் முனை; தகவல் புள்ளி: வரைபட அட்டவணையிடும்