பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data seg

202

data str



தகவல்கள் அழிந்துவிடாமலும், வெளிப்படுத்துதல், திருத்தம் ஆகியவற்றுக்கு ஆட்படாமலும் பாதுகாத்தல். கணினிப் பாதுகாப்பு, வட்டு நூலகம், பதிவு நாடா நூலகம் ஆகிய வற்றையும் காண்க.

data segment : தகவல் கூறு : கணிப்பொறியானது எந்தத் தகவல் குறிப்புகளின் அடிப்படையில் செயற்படுகிறதோ அந்தத் தகவல்களைச் சேமித்து வைக்கிற கணினி நினைவுப்பகுதி.

data set : தகவல் தொகுப்பு ; தகவல் தொகுதி : 1. தகவல் தொடர்பு வழி ஒன்றின் மூலமாக அனுப்பக்கூடிய வடிவத்துக்கு தகவல்களை அனுப்பும் கருவி. அடுத்த முனையில் அதே போன்ற மற்றொரு கருவி தகவல்களை அதன் பழைய வடிவத்துக்கு மாற்றுகின்றது. அதனால் கணினி அல்லது பிற எந்திரங்களுக்கு அந்தத் தகவல்கள் ஏற்புடையவை ஆகின்றன. 2. தொடர்புடைய தகவல் வகைகளின் தொகுப்பு, குறிப்பாக தொடர்புடைய ஆவணங்களின் தொகுப்பு, கோப்பு எனப்படும்.

data set control block : தகவல் தொகுதிக்கட்டுப்பாட்டுப்பகுதி: ஒரு வட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு தகவல் தொகுதியின் அல்லது தொகுதிகளின் பெயர். சுருக்க விவரிப்பு, அமைவிடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிற பகுதி.

data set label (DSL): தகவல் தொகுதி முகப்புச்சீட்டு (டிஎஸ்எல்) : தகவல் தொகுதியை அடையாளம் காண்பதற்கு அதன் பெயர், வடிவளவு, எழுதப்/படிக்க வசதிகள், சேமிப்பகத்தில் அதன் அமைவிட எல்லைகள் போன்ற விவரங்களைக் கொண்டுள்ள முகப்புச் சீட்டு.

data sharing: தகவல் பகிர்வு: கணினி ஒன்றின் தயாரிப்புத் திறன் அல்லது பல முனைகளில் உள்ள கணினி பயன்படுத்துவோர் ஒரு முனையில் உள்ள தகவல்களைப் பெறுவதற்கான திறன்.

data sheet : தகவல் தாள் : உள்ளிட்டு மதிப்பீடுகளைத் தட்டச்சுசெய்வதற்கு வசதியான ஒரு வடிவில் பதிவு செய்வதற்கு உதவும் சிறப்புப் படிவம்.

data signal : தகவல் குறிப்பு : ஒரு வரியில் அல்லது வழியில் செல்லும் பருநிலைத் தகவல் (துடிப்புகள் அல்லது அதிர்வுகள் அல்லது மின் விசை அல்லது ஒளி).

data sink : தகவல் சேமிப்புக் கலன் : தகவல்களை அனுப்பும் கருவி ஒன்றின் வழியாக அனுப்பப்படும் சமிக்ஞைகளை ஏற்கக்கூடிய பதிவுக் கருவி அல்லது எதிர்காலப் பயன்பாட்டுக்காக சேமிக்கும் கருவி.

data source: தகவல் ஆதாரம்: தகவல் அனுப்பு கருவி ஒன்றுக்காக குறியீடுகளை உருவாக்கும் திறன் உள்ள கருவி.

data storage device: தகவல் தேக்கக் கருவி; தகவல் சேமிப்புக் கருவி : ஆயிரக்கணக்கான அல்லது பல இலட்சக்கணக்கான எழுத்துகளை சேமிப்பதற்கான கருவி, மின்காந்த வட்டு, நாடா, கொள்கலன் அல்லது அட்டை.

data storage techniques : தகவல் தேக்க நுட்பங்கள்; தகவல் சேமிப்பு உத்திகள் : தகவல் கோப்புகளை சேமிக்க, ஆணைத்தொகுப்பு ஒன்றில் கையாளப்படும் உத்திகள்.

data stream : தகவல் ஓடை : ஒற்றை உள்ளிட்டு/வெளியீட்டுச் செயல் மூலம் தகவல் வழி ஒன்றின் மூலமாக