பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FAT 279

முகப்பு தயாரிப்பில் புகழ் பெற்ற 'எவலூஷன் கம்ப்யூட்டர்ஸ்' என்ற அமைவனம் தயாரிக்கும் முழு அம்சங்களையும் கொண்ட PC CAD செயல்முறை. இதற்கு ஒரு கணித இணைச் செய்முறைப்படுத்தி தேவை.

FAT : ஃபேட் : "கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை' என்று பொருள்படும் "File Allocation Table" GTaảTug, cảT

தலைப்பெழுத்துச்சுருக்கம். fatal error : முடிவான பிழை : ஒரு ஆணைத்தொடர் இயக்கப்படும்

போது ஏற்படும் எதிர்பாராத பழுது அல்லது பிற சிச்கல்களினால் கணினி யானது தொடர்ந்து செயல்பட முடி யாமல் போவது. முடிவான பிழை இல்லை எனில் சரியான முறையில் இல்லையென்றாலும் ஆணைத் தொடர் சென்று கொண்டிருக்கும். ஆணைத்தொடர் நின்று போகுமாறு செய்கின்ற ஒரு இயக்காளரின் தவறு அல்லது 'ராம்' நினைவகத்தில்

சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் அழிந்து போதல் போன்றவை முடி வான பிழைகளாகும்.

TerminalError என்றும் அழைக்கப்படு கிறது. fat bits : பருமனான துண்மிகள் : தனிப்பட்ட திரை உறுப்புகளை மாற் றும் வகையில் திரையின் ஒரு பகுதி யைப் பெரிதாக ஆக்குகிறது. வண்ண மிடும் ஓவிய ஆணைத்தொடரின் தேர்ந்தெடுக்கும் முறை. எழுத்து அமைப்பு உருவாக்குவதில் பய னுள்ளது. father file : ‘āsāong, Gömüu’: epool's பதிவேட்டின் ஒரு நகலையும் வைத் துக்கொண்டு திருத்தப்பட்ட பதிப் பையும் தருகின்ற வகையில் பதி வேடுகளைப் புதுப்பிக்கும் அமைப்பு.

fault

ஒரு கோப்பினைப் புதுப்பிக்கும் பணி நடைபெறும்போது பழைய மூல கோப்பை தந்தை கோப்பு என் கிறோம். தந்தை கோப்பை உருவாக் கும் கோப்பு தாத்தா கோப்பு'. வட்டு அல்லது நாடா போன்ற மின்காந்த ஊடகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்புகளுக்கு இத்தொழில்நுட்பம் மிகவும் பொருத்தமானது. fault . கோளாறு; பழுது: வடிவமைக் கப்பட்ட விதிமுறைகளின்படி செயல் பட முடியாமல் தடுக்கும் நிலை. பிரிந்தகம் அல்லது அரை மின்சுற்று போன்றவை ஒரு துணை பாகத் திலோ, கணினியிலோ அல்லது வெளிப்புற உறுப்பிலோ செயல்பட முடியாமையை ஏற்படுத்தல். Error and Mistake GrcitugßG sigliż சொல்.

fault tolerance : L(pg. 37th/53 spot: வன்பொருள் அல்லது மென்பொருள் கோளாறுகள் இருந்தபோதும் வடிவமைப்பு விதிமுறைகளின்படி ஒரு கணினி அமைப்பு தன் பணி களைச் செய்யும் திறன். கோளாறின் போது இயங்கி அதே வேளையில் சரிவர செயல்படவில்லையென்றால் பாதி அல்லது ஒரளவு கோளாறு தாங் கும் திறனுடையது என்று சொல்ல லாம். கூடுதல் வன்பொருள், மென் பொருள் அல்லது இந்த இரண்டின் இணைப்பின் மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.

fault-tolerant computer systems : பழுது சகிப்புக் கணினிப் பொறி யமைவு : பன்முக மையச் செய் முறைப்படுத்தி, பொறியமைவு மென் பொருள் ஆகியவையுடைய கணினி கள். இவை, ஒரு முக்கியமான வன் பொருள் அல்லது மென்பொருள் செயலிழந்தாலுங்கூட செயற்பாடு