பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு சொல் தனியாக வரும்போதும், சொல் தொடருடன்

இணைந்து வரும்போதும், எவ்விதப் பிசிறும் இல்லாமல் எல்லாவகையான சொல்/தொடர் அமைப்புகளிலும் அதே சொல் இடம் பெறும் வகையில் சொல்லாக்கம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Input - உள்ளீடு

Inputting - உள்ளிடுதல்

Input Data - உள்ளீ ட்டுத் தகவல்

Input Unit - உள்ளீ ட்டகம்

  • முக்கியமான பல சொற்களுக்கு விரிவான விளக்கங்கள் அளித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இதன்மூலம், ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை அறிந்து கொள்வதோடு, கணினியின் குறிப்பிட்ட செயலுறுப்பையோ/ செயல்பாட்டையோ/ பயன்பாட்டையோ முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பும் நமக்குக் கிட்டுகிறது. எடுத்துக்காட்டாக, 'Compilation என்ற சொல்லுக்கு தொகுத்தல்' என்ற பொதுப் பொருளையும், 'மொழி மாற்றல்' என்ற சிறப்புப் பொருளையும் குறிப்பிடுகிறார். அதனைத் தொடர்ந்து, அச்சொல்லை விளக்குகிறார். 'செயலகத்தில் நேரடியாக இயக்கப்படுவதற்காக உயர்நிலை மொழிகளில் எழுதப்பட்ட ஆணைத் தொடர்களை எந்திரமொழி ஆணைகளாக மொழிபெயர்த்துத் தரும் இரு முக்கிய முறைகளில் ஒன்று. இயக்கத்திற்கு முன்பே முழு ஆணைத் தொடர்மொழி மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஆணைமாற்றி (Interpreter)க்கு மாறானது. ஆணைமாற்றி முறையில் ஒவ்வொரு ஆணையும் அது செயல்படுத்தப்படும் போது மட்டுமே மாற்றப்படுகிறது. இந்த விளக்கத்தின் மூலம் 'Compilation' என்ற சொல் கணினித் துறையில் குறிக்கும் பொருளை சரியாக அறிந்து கொள்வதோடு interpretation என்னும் இன்னொரு செயல்முறை பற்றியும் புரிந்து கொள்ள முடிகிறது.

தலைப்பெழுத்துச் சுருக்கமாய் அமையும் பெயர்ச் சொற்களை அப்படியே ஒலிபெயர்ப்பாகத் தந்துவிடுகிறார்.

PERT Chart - பெர்ட் வரைபடம்

PET Computer - பெட் கணினி

  • ஒரு சொல்லுக்குரிய விளக்கத்தை அளிக்கும்போது,

விளக்கத்தில் இடம்பெறும் சில புதிய தமிழ்ச் சொற்களுக்குரிய ஆங்கிலச் சொல்லையும் அடைப்புக் குறிக்குள் தந்து விடுகிறார்.

Click - சொடுக்கு, சுட்டுக் கருவி (மவுஸ்) பொத்தானை அழுத்தும் முறை.

36)