பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

access con 45 account

access control register : அணுகுக் கட்டுப்பாட்டுப்பதிவு : செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கத்துக்கு தகவல் அணுகலைக் கொடுக்கும் எந்திரப் பதிவு.

access light : அணுகு ஒளி : கணினி ஒரு வட்டில் எழுதும் போதோ அல்லது படிக்கும் போதோ கணினி முகப்பில் ஒளியின் மூலம் சமிக்ஞை அளிப்பது. வட்டு இயக்கியில் கூட இது சில சமயம் இருக்கலாம்.

access limits : அணுகு எல்லைகள் : பாதுகாக்கப்பட்ட தகவல் கோப்பு களின் தொகுதியைப் படிக்கவோ, பயன்படுத்தவோ அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை.

access mechanism : அணுகு பொறியமைவு: காந்த வட்டுச் சேமிப்பக அலகில் படித்தல் மற்றும் எழுதுதல் முனையை உரிய தடத்தில் நிறுத்தும் உறுப்பு.

access method : அணுகு முறை : சேமிப்பு மற்றும் உள்ளீட்டு வெளி யீட்டுப் பொறிகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றத்துக்கு இயக்கு வோர் பயன்படுத்தக் கூடிய பரா மரிப்பு உத்திகளில் ஏதாவது ஒன்று.

access monitoring : அணுகு மேற் பார்வை : சரியான அனுமதிச் சொல் லைக் கொடுப்பதற்கு ஒரு சில வாய்ப்புகளை மட்டுமே கொடுக்கும் அணுகுக் கட்டுபாட்டு முறை.

access permission : அணுகல் அனுமதி : அணுகுவதற்கு முந்தைய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்பட்டு ஒரு ஆணைத் தொடரை இயக்க அனுமதித்தல்.

accessprotocol : அணுகுவரை முறை: தடங்களில் சமிக்ஞைகளை அனுப்பு வதற்கு ஒரு கட்டமைப்பில் உள்ள சாதனங்கள் பயன்படுத்தும் போக்கு வரத்து விதிகள். எதைப்பயன்படுத்தி னாலும், ஒரு நேரத்தில் ஓர் இடத்தி லிருந்து மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இல்லையேல், தகவல் தவறாகும் அல்லது தொலைந்து போகும்.

access speed : அணுகு வேகம் : முதன்மை அல்லது துணை நினை வகத்திலிருந்து தகவல்கள் கேட்கப் பட்டதிலிருந்து அவை எடுக்கப் பட்டு, பயன்படுத்த ஆகும் நேரம்.

accesstime : அணுகு நேரம் : சேமிப்பி லிருந்து ஒரு குறிப்பிட்ட தகவலைக் கண்டறிந்து, வெளியீட்டுக்கு வழங்குவதற்கான நேரம் அல்லது தகவல் ஒன்றைச் சேமிப்பு இடத்தைக் கண்டறிந்து வழங்குவதற்கான நேரம்.

access vector : அணுகு ஆரம் : தேவையான தகவல்களைக் கண்டு பிடிக்க உதவும் ஒரு தகவல்.

accessory : துணையுறுப்பு: ஃபிளாப்பி எனும் நெகிழ்வட்டு இயக்கி, அச்சுப் பொறி போன்ற ஒரு வெளிப்புறச் சாதனம்.

account number : கணக்கு எண் : ஒரு கணினி மையத்தில் கணினி பயன் படுத்தும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ அளிக்கப்படும் எண். அந்த எண் பாதுகாப்பு மற்றும் கட்டணம் கணக்கிடும் நோக்கத்துக் காகப் பயன்படும். அனுமதி சொற் களையும் (Passwords) கணக்கு எண்களாகப் பயன்படுத்தலாம் அல்லது அனுமதிச் சொற்களுடன் கணக்கு எண்ணும் தரப்படலாம்.

accounting information system : கணக்கிடும் தகவல் அமைப்பு : ஒரு நிறுவனத்தின் பண ஓட்டம் போன்ற வணிகப் புழக்கங்களைப் பதிவு