பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

address 51 ad hoc

தேவைப்படும் நேரம். இதில் சேமிப் பிலிருந்து தகவல்களைப் பெறுவதற் கும் மீண்டும் அதனை சேமிப்பகத் துக்கு அனுப்புவதற்கும் தேவைப் படும் நேரம் அடங்காது.

address : முகவெண் : சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பிடுகிற அடையாள எண் அல்லது பெயர்.

address bus : முகவெண் தடம் : முக வரித் தகவலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் மின் தடம்.

address decoder: முகவெண்விரிப்பி; முகவரிக் கொணரி : எழுத்துக் குறியீட் டில் தரப்படும் முகவெண்ணை விரித் துப் பெற உதவும் இணைப்பு.

address format : முகவெண் அமைப்பு: முகவெண்ணைக் குறிப்பிடும் முறை.

addressing : முகவெண்ணிடல் : (1) குறிப்பிட்ட உத்திகள் மூலம் தேவை யான தகவல்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணல். (2) தகவல் அனுப் பும் கணினி மற்றொரு குறிப்பிட்ட முனையத்துக்கான தகவல் தன்னிடம் இருப்பதைக் குறிப்பிடும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு முறை.

address management : முகவெண் மேலாண்மை : முகவரி எண்களைக் கொண்ட தகவல் தளம் அமைக்க உதவும் மென் பொருள்.

address mapping : முகவெண் காணல் : ஒரு விவர சேமிப்பு இருப் பிடத்தின் சரியான முகவரி எண்ணைக் கண்டுபிடித்தல்.

address mode: முகவெண்முறை: ஒரு ஆணை, நினைவகத்தை எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதற்கான முறை. மறைமுக முகவெண் வேறொரு முகவெண்ணைக் குறிப் பிடுகிறது. செயலாக்கம் செய்யும் போது உண்மையான, முழு முக வெண்களைக் கண்டுபிடிக்க, தேவை யான தகவல்களின் இருப்பிடம் காணப்படும்.

addressable cursor : முகவெண் சுட்டு; முகவரி எண் அடையாள அம்பு: திரையில் உள்ள எந்த வரிசை அல்லது பத்தியையும் நகர்த்தக்கூடிய வகையில் ஆணைத் தொடர் அமைக் கப்பட்ட திரைச் சுட்டு.

address modification : முகவெண் திருத்தம்; முகவெண் மாற்றம் : கணினி ஒன்றினால் ஒரு குறிப்பிட்ட வழியில் முகவெண்ணை மாற்றுவதற்கான நடவடிக்கை .

address register : முகவெண் பதிவேடு : தற்பொழுது நிறைவேற்றப் படும் ஆணையின் முகவெண் உள்ள பதிவு.

address space : முகவெண்களம்; முக வெண்தொகுதி: கணினி ஒன்றைப் பயன்படுத்துவோருக்குக் கிடைக்கக் கூடிய முகவெண்களின் முழுத் தொகுப்பு.

address translation : முகவெண் பெயர்ப்பு; முகவெண் மாற்றம் : உள் நினைவில் கோக்கப்பட வேண்டிய , அல்லது வேறிடத்துக்கு மாற்றப்பட வேண்டிய முகவெண்ணுக்கு ஏற் கெனவே நினைவில் உள்ள தகவ லின் அல்லது ஆணையின் முக வெண்ணை மாற்றும் நடைமுறை.

adjacent matrix : அண்டை அணி; அருகு எழுத்துரு.

ad hoc inquiries : தற்காலிக வேண்டு கோள்கள் : தனிப்பட்ட, பட்டிய லிடப்படாத, சூழ்நிலைக்கேற்ற தகவல் வேண்டுகோள்கள்.