பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

security

605

segment


அல்லது தகவல் மூலம் பெறப்படும் நிலை.

security control: காப்புக் கட்டுபாடு.

security files : காப்புக் கோப்புகள், பாதுகாப்புக் கோப்புகள் : முக்கியமானதும் இன்றியமையாததுமான தகவல்களுக்காக துணையாதரவுக் கோப்புகள்.

security monitor : பாதுகாப்புக் காணிப்பி : ஒரு கணினிப் பொறியமைவின் பயன்பாட்டைக் கண்காணித்து, அதன் ஆதாரங்களை அனுமதியின்றி, மோசடியாக, அழிக்கும் வகையில் பயன்படுத்துவதிலிருந்து பாதுகாக்கும் ஒரு மென்பொருள் தொகுதி.

security programmes: காப்புச் செயல்முறை, பாதுகாப்பு ஆணைத்தொடர், காப்புநிரல் : கோப்புகளிலுள்ள தகவல்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தி, முனையங்களையும், பிற சாதனங்களையும் பயன்படுத்த அனுமதியளிக்கிற செயல்முறை.

security specialist: காப்பளிப்பு வல்லுநர்; பாதுகாப்பு வல்லுநர் : கணினி மையத்தின் பாதுகாப்புக்கும், தகவல் ஆதாரங்களின் தருக்க முறைப் பாதுகாப்புக்கும் பொறுப்பானவர்கள்.

seed : வித்து; விதை; மூல எண்: போலிக் குறிப்பின்மை எண் உருவாக்கியைத் தொடங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மாறி. முதல் எண்ணை உருவாக்கப் பயன்படுகிறது. பின்வரும் எண்கள் அனைத்தும் முந்திய பலன்களை அடிப்படையாகக் கொண்டவை.

seek : தேடு, கண்டறி, நாடல்: ஒரு நேரடி அணுகுச் சாதனத்தை ஒரு குறிப்பிட்ட அமைவிடத்தில் நிலைப் படுத்துவதற்கான அணுகுச் செயல் முறை.

seek time : கண்டறியும் நேரம், தேடு காலம்: ஒரு நேரடி அணுகு சேமிப்புச் சாதனத்தின் அணுகு செயல்முறையினை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிலைப்படுத்துவதற்குத் தேவைப்படும் நேரம். எடுத்துக்காட்டு : படிப்பு/எழுதுத் தலைப்பினை ஓர் இயக்கியை வட்டின் குறிப்பிட்ட தடத்தின் மீது நிலைப்படுத்துவதற்குத் தேவைப்படும் கால அளவு.

segment : வெட்டுக் கூறு , பிரிவு, பகுதி: 1. ஒரு செயல்முறையைப் பல கூறுகளாகப் பகுத்து, கூறுகள் உள்முகச் சேமிப்பிலும், மற்றக் கூறுகள் துணைச் சேமிப்பிலும் தங்கியிருக்கும்படி செய்தல். ஒவ்வொரு கூறிலும், மற்றொரு கூறுக்குத் தாவுவதற்கான அல்லது மற்றொரு கூறினை உள்முகச்சேமிப்புக்கு வரவழைப்பதற்கான ஆணைகள் அடங்கியிருக்கும். 2. ஒரு மேல்நிலைச் செயல்முறையை நிறைவேற்றும்போது ஒரு தருக்க முறை அலகாக ஏற்றக்கூடிய மிகச்சிறிய செயல்முறை அலகு. 3. தொலைத் தொடர்புக் களத்தைப் பொறுத்த வரையில், குறிப்பிட்ட அளவுள்ள இடைத்தடுப்பில் அடக்கக் கூடிய ஒரு செய்தியின் பகுதி.

segmentation : வெட்டுக் கூறாக்குதல், பிரித்தல், பகுதியாக்கல் : கணினிச் செயல்முறையினைத் தருக்கமுறை மாறியல் நீட்சிப் பகுதிகளாகப் பகுப்பதற்கான உத்தி.

segmented address space : கூறுபாட்டு முகவரி இடவெளி : இது முகவரிப்படுத்தும் நினைவகம். இதில், ஒரு கூறுபாடு அல்லது ஆதாரம், எண் அதற்குச் சேர்க்கப்படும் ஒரு மாற்று மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு எட்டியலும் குறிக்கப்படுகிறது.