பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

triple twi

693

true



பொருளில் மூன்று மடங்கு எண் களைப் பயன்படுத்தி வைத்திருத்தல்.

triple twist: மும்முறுக்கு: மேம்பட்ட தெளிவுக்காக படிகங்களை 260 டிகிரி களில் முறுக்குகின்ற மீ முறுக்கு மாறுபாடு.

tristate logic: மூன்றுநிலை தருக்கம்; முன்நிலை தருக்கமுறை : ஒருவகை சிறு மின்மப் பெருக்க தருக்க வடிவம். இதில் உள்ளீடு மற்றும் வெளியீடு வேலைகள் மூன்று நிலைகளை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு வழக்கமான குறைந்த ஓட்டம் மற்றும் 1,0 நிலைகளை ஏற்றல். பல மூன்று நிலை தருக்க சாதனங்களுக்கு நேரப்பங்கீட்டு தடயக் கம்பிகளை இது அனுமதிக் கிறது.

tristimulus values : முத்தூண்டல் மதிப்புகள்: பிற நிறங்களை உருவாக்கக் கலக்கப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் ஒவ்வொன்றின் அளவுகள்.

trojan horse : டிரோஜன் குதிரை: கணினி கிருமி(virus)களில் ஒரு வகை. கணினி குற்றவாளி ஒருவர் வேறொருவரின் ஆணைத் தொடரில் ஆணையை விட்டு வைப்பார். ஆணைத்தொடர் வழக்கமானது போலவே செயல்பட்டு நாம் சேமித்து வைத்துள்ள கட்டளைத் தொடர்களையும் தகவல்களையும் பழுதாக்கிவிடக் கூடியது.

tron: டிரான்: புகழ்பெற்ற அதிநுட்ப முன் அடைச்சொல்.

troubleshoot:தவறு காணல்: கணினி ஆணைத்தொடரில் உள்ள ஒரு தவறு அல்லது வன்பொருள் அலகில் உள்ள ஒரு கோளாறைக் கண்டறிய முயலுதல்.

TRS (Tandy Radio Shack): டிஆர்எஸ்: Tandy Radio Shack என்பதன் குறும்பெயர். டான்டியின் பி.சி.களுக்கு கூறப்பட்ட முதல் வணிகப் பெயர். 1977இல் முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்ட மூன்று கணினிகளில் ஒன்றாக டிஆர்எஸ் 800 இருந்தது. அதன் செயலாக்க அமைப்பின் பெயர் டிஆர்எஸ் டாஸ் (TRS, DOS)

TRS DOS - டிஆர்எஸ் டாஸ் : Tandy Radio Shack Disk Operating System என்பதன் சுருக்கப் பெயர். டிஆர்எஸ் 80 நுண்கணினிகளின் இயக்க முறைமை.

TRS80 Microcomputer: டிஆர்எஸ் 80 நுண்கணினி : டான்டி கார்ப்ரேஷனின் ஒரு பிரிவான ரேடியோ ஷாக் நிறுவனம் உற்பத்தி செய்த பல நுண் கணினி அமைப்புகளின் வணிகப் பெயர்.

true colour : உண்மை நிறம்: 1. 16,77,216 நிறங்களை (24 துண்மி நிறம்) உருவாக்கக் கூடிய திறன். 2. ஒளிப் படம் போன்று நிற உருவங் களை உருவாக்கும் திறன். (24.துண்மி நிறம் குறைந்த அளவு தேவைப் படும்).

true image : உண்மைத்தோற்றம் : நுண்மென்பொருளின் மேம்படுத்தப் பட்ட பிற்சேர்க்கை வரி மொழி மாற்றி. பிற்சேர்க்கை வகை 1 மற்றும் உண்மை வடிவ எழுத்துகளை இது அச்சிடுகிறது.

true Type : உண்மை வகை : ஆப்பிள் நிறுவனத்தின் அளவு மாறக்கூடிய அச்செழுத்து நுட்பம். ஒவ்வொரு அச்செழுத்தும் அதற்கென்று தனி யான நெறிமுறையைக் கொண்டு திரைக்கும் அச்சுப்பொறிக்கும் துண்மிப் படங்களை உருவாக்கும்