பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

astable 68 asynchro

நினைவகம் என்றும் தேடல் நினை வகம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

astable: நிலையற்ற : மின்னணு மின் சுற்றுகளில் மாறிக் கொண்டிருக்கும் நிலை ஒரு நிலையில் இருந்து தொடர்ச்சியாக வேறொரு நிலைக்கு மாறிக் கொண்டே இருத்தல். மின் னணுக் கடிகாரங்களில் பயன்படுத் தப்படும் நேரம் அமைக்கும் மின் னணுச் சாதனம் கணினி கடிகாரத்துக் கும் இதுவே அடிப்படை.

asterisk : உடுக்குறி : பல கணினி மொழிகளில் பெருக்கல் இயக் கியைக் குறிப்பிடும் குறியீடு.

astronomy: வானவியல் : நட்சத்திரங் கள், கோள்கள்பற்றி மின்னணுத் தகவல் தொடர்பு முறையில் ஆராயும் அறிவியல்.

asymmetric modem : மாறுபட்ட மோடெம் : இருபுற தகவல் பரிமாற் றம் செய்யும் மோடெம். வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகத்தில் தகவல்களை அனுப்பக் கூடியது. சான்றாக ஒப்புதல்கள் ஒரு திசையில் மெதுவாக அனுப்பப்படும். ஆனால் தகவல் அதிக வேகத்தில் வேறொரு திசையில் அனுப்பப்படும்.

asymmetric multiprocessing: மாறுபட்ட பல்முனைச் செயல்பாடு : ஒரு மையச் செயலமைப்பு குறிப்பிட்ட பணிக்கு மட்டும் என்று ஒதுக்கப் பட்டுள்ள பல்முனை செயலாக்க வடிவமைப்பு.

asymmetric system : ஒழுங்கற்ற அமைப்பு: பெரிய பாகங்கள் அல்லது தன்மைகள் வெவ்வேறாக உள்ள கணினி அமைப்பு. ஒளிக்காட்சி நெருக்குதலில், தகவல்களை நெருக் குவதற்கு அதிகக் கருவிகள் தேவைப் படுகின்ற அமைவு.

asynchronous : நேரச்சீரிலி : ஒரு வகை தகவல் தொடர்புடன் சம்பந் தப்பட்டது. எழுத்துகள் அனுப்பப் படும் பொழுது ஒன்றுக்கும் மற் றொன்றுக்கும் இடையே மாறுபடும் நேர இடைவெளி கொண்டது.

asynchronous device : நேரச்சீரற்ற சாதனம் : தகவல் தொடர்பு கொள் ளும் கணினி அமைப்புக்கு வெவ் வேறு இடைவெளிகளில் சமிக்ஞை களை அனுப்பிடும் சாதனம்.

asynchronous computer : நேரச்சீரற்ற கணினி : முன் செயல் நிறைவடைந் தால் உருவாக்கப்படும் சமிக்ஞை யைத் தொடர்ந்து அல்லது செயலாக் கத்துக்குச் சாதனம் கிடைக்கும் பொழுது அடுத்த செயல் தொடரும் கணினி. நேர்ச்சீர்க் கணினிக்கு இது மாறானது.

asynchronous input : நேரச்சீரிலா உள்ளீடு : கணினியின் நேரச்சீரிலா உள்ளீட்டுத் தகவல்.

asynchronous mode : நேரச்சீரிலா முறை : ஒரு செயல் முடிந்த பிறகே அடுத்ததைத் துவங்க அனுமதிக்கும் முறையில் செயலாற்றும் கணினி . ஒரே நேரச்சீர்க் கணினியில் உள்ளது போல் ஒரு செயலைச் செய்ய அடுத்த நேரத் துவக்கம் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

asynchronous protocol : நேரச் சீரிலி நெறிமுறை : நேரச்சீரிலா முறையில் தகவல் அனுப்புவதைக் கட்டுப்படுத் தும் தகவல் தொடர்பு நெறி முறை.

asynchronous transmission : நேரச் சீரிலா அனுப்புகை : ஒவ்வொரு எழுத் தும் தனித் தன்னிறைவு அலகாக அமைந்து தனக்கென ஆரம்ப, முடிவு துண்மிகளைக் கொண்டதாக தக வல்களை அனுப்பும் முறை. ஒவ்