பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

UA

700

uncomm



UA : யுஏ : எண்ணிக்கை தரப்படாத ஏற்பு.

UAE: யுஏஇ: Unintererruptible Application Error என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர். தடைவராத பயன்பாட்டுப் பிழை. விண்டோஸ் பதிப்பு 3.0வில் உள்ள பயன்பாட்டு ஆணைத் தொடர்.

UART :யூஆர்ட் : Universal Asynchronous Receiver Transmitter என்பதன் குறும்பெயர்.

UCSD Pascal :யுசிஎஸ்டி: சாண்டியாகோவில் உள்ள கலிஃ போர்னியா பல்கலைக்கழகம் உரு வாக்கிய பாஸ்கல் ஆணைத்தொடர் மொழியின் புகழ்பெற்ற பதிப்பு.

UCSD P-System : யுசிஎஸ்டி பி-அமைப்பு : சாண்டியாகோவின் கலி ஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கென்னத் பவுல்ஸ் உருவாக்கிய ஆணைத்தொடர் உருவாக்கும் அமைப்பு. ஒரு செயல்பாட்டு அமைப்பு, சொல் தொகுப்பி மற்றும் ஃபோர்ட்ரான், மைக்ரோ சாஃப்ட் பேசிக் தொகுப்பிகள் ஆகியவை இதில் அடங்கும். P என்பது pseudo computers என்னும் போலி கணினிகள் என்பதைக் குறிக்கும். இந்த அமைப்பின் தொகுப்பிகள் சரியான பி-குறியீட்டை உருவாக்கு கின்றன. இக்குறியீடு போலி கணினி களில் இயங்கக்கூடிய பி-அமைப் பில் ஓடும் கணினிகளுக்கு குறைந்த மொழிபெயர்ப்பு வசதி அளித்தால் போதும். பி-குறியீடு கணினிக்காக குறியீடுகளை மாற்றித் தருகின்றன.

ULSI: யுஎல்எஸ்ஐ :(மிகப் பெரும் ஒருங்கிணைப்பு) : Ultra Large Scale Integration என்பதன் குறும்பெயர். super large scale integration போன்றதே இதுவும்.

ultrafiche : மீ நுண்படலம்: நூறு மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் உருவம் குறைக்கப்பட்ட நுண் படலம்.

ultrasonic : கேளாஒலி : மனிதர்கள் கேட்கும் அளவுக்கு அதாவது 20 கிலோ ஹெர்ட்சுக்கு- மேற்பட்டது.

ultraviolet light: புறஊதா ஒளி: பார்க் கக்கூடிய ஒளியைவிட சிறியதான - ஆனால் எக்ஸ் கதிர்களைவிட நீண்ட கதிர்களைக் கொண்ட ஒளி. அழிக்கக் கூடிய ப்ராமில் (Prom) எழுதப்பட்ட தகவல்கள் அல்லது ஆணைகளை அழிக்கப் பயன்படுத்தப்படுவது. ஈப்ராமை அழிப்பதற்கு, ப்ராம் ஆணைத்தொடர்கள்மூலம் மீண்டும் ஆணைத்தொடர் அமைக்க முடியும்.

ultra-violet radiations: புறஊதாக்கதிர் வீச்சு.

unary : ஒரும.

unary operation: ஓருறுப்புச் செயல்.

unary operator : ஓருறுப்பு இயக்கி : எதிர்மறை போன்ற ஒரே ஒரு கூறி னைக் கொண்டுள்ள கணித இயக்கி.

unattended operation : ஆளில்லாத இயக்கம் : இயக்குபவர் இல்லாமல் தகவல் அனுப்புதல்/பெறுதல்.

unbundled : கட்டி அனுப்பாத : வன் பொருள் உற்பத்தியாளர்கள் கணினி வன்பொருள் விற்கும்போது தராமல் தனியாக விற்கும் மென்பொருள், பயிற்சி மற்றும் பணிகள் பற்றியது.

unbundling : கட்டப்படாத : வன் பொருள், மென்பொருள் மற்றும் பிற தொடர்புள்ள பணிகளைத் தனியாக விலை குறித்தல்.

uncommitted logic array :உறுதிப்படாத தருக்கவரிசை: ஒரு வகையான