பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unicorn

702

UNIVAC



களுக்கும் இடையில் பங்கிட்டுக் கொள்வது.

unicorn : யுனிகார்ன் :வீட்டு நுண் கணினி, கல்வி மற்றும் வீட்டு கணிப்புக்கு மிகவும் புகழ்பெற்றது. 64கே நினைவகத்துடன் வரும் 65028 துண்மி சார்ந்தது. பி.பி. அக்கரன் (Acron)உடன் ஏற்புடையது. ஐபிஎம் பிசி மிகவும் புகழ் பெறவும், விலை கள் குறையவும் யூனிகார்னும் தன் புகழை இழந்தது.

unidirectional: ஒரே திசையிலான: ஒரு வழித்தடத்தில் தகவல்கள் ஒரே ஒரு திசையில் மட்டும் அனுப்புவது.

unidirectional printing : ஒரே திசையிலான அச்சிடல் : ஒரே திசையில் மட்டும் அச்சிடல். இரு திசையில் அச்சிடுவதற்குப்பதிலாக துல்லிய மாக செங்குத்து அமைப்பில் அச்சிடு கிறது.

unifyy: யூனிஃபை: ஒரு பொது நோக்க டிபிஎம்எஸ் பயன்பாட்டுப் பணித் தொகுப்பு. ஒரு குறிப்பிட்ட சூழ் நிலையில் மிகச் சிறந்ததைத் தேர்ந் தெடுக்கும் உள்ளமைக்கப்பட்ட ஆப்டிமைசரை (optimizer)அணுக பல முறைகளை வழங்கு கிறது.

unigraphics:யூனிகிராஃபிக்ஸ்: மைக் டொனால் டக்ளஸ் சிஏ/காட்/காம் அமைப்பு. விரிவான வடிவமைப்பு, வரைவு, பொறியியல் ஆய்வு மற்றும் எண் கட்டுப்பாடு, தகவல் உருவாக் கம் போன்ற பயன்பாடுகளின் அடிப் படையை உருவாக்குகிறது.

uninitialized: ஆரம்பிக்கப்படாத: ஒரு பெறுமிடம், சேமிப்பிடம், மாறி மற்றும் இவை போன்றவற்றின் ஆரம்ப மதிப்பு தருதல்.

union : ஒன்றல் : உறவுமுறை தகவல் தளத்தில், இரண்டு கோப்புகளை ஒன்று சேர்த்தல்.

uninterruptable power supply (UPS): தடையில்லா மின் விநியோகம் (யூபிஎஸ்); தடை செய்யவியலா மின் சக்தி: இருட்டடிப்பு போன்ற சமயத் தில் கணினிக்கு மின்சாரம் தருவதற் காக அமைக்கப்பட்ட மின்கலத்தால் இயங்கும் சாதனம்.

unipolar : ஒரு துருவம்: ஒரு துருவம் மட்டும் கொண்டது.

unit : அலகு : சிறப்புப் பணி உள்ள எந்த ஒரு சாதனமும், கணித தருக்க அலகு, மையச் செயலக அலகு அல்லது காந்த நாடா அலகு.

unit position :புலநிலை; ஒன்றின் நிலை : எண் புலத்தில் வலது இறுதி நிலை.

unit record:பதிவேடு அலகு:தகவல் களால் குறியீடு செய்யப்பட்டு கணினி உள்ளீடாகப் பயன்படுத்தப் படும் துளையிட்ட அட்டை.

unit record system : அலகு பதிவு அமைப்பு : தானியங்கி கணினிமய அமைப்புக்கு மாறாக தொழில் நுட் பாளர்கள் இயக்கும் பிரிப்பிகள், அடுக்கிகள் போன்ற மின்னியந்திர செயலாக்க எந்திரங்களைப் பயன் படுத்தும் தகவல் செயலாக்க அமைப்பு. அலகு பதிவு அமைப்பு களெல்லாம் நவீன கணினிக் கருவி களால் மாற்றபட்டுவிட்டன.

UNIVAC1:யூனிவாக்1: 1951இல் செய்து முடிக்கப்பட்ட வணிக வகையிலான முதல் மின்ன எண்முறைக் கணினி. 1950ஆம் ஆண்டின் (அமெரிக்க) மக்கள் தொகைக் கணக்குத் தொடர்பான தகவல்கள் சிலவற்றைத் தொகுக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலகம் இதைப் பயன்படுத்தியது. இத்தகைய கணினிகள் 48 செய்யப் பட்டன.