பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

video text

714

virtual


 வுக்கு மாற்றலாம். இதனைக் காட்சித் தகவல் என்றும் கூறுவர்.

videotex systems : வீடியோடெக்ஸ் அமைப்பு: மனிதர்களுக்கும், சேமிக்கப்பட்ட தகவல் தளங்களுக்கும் இடையில் பரிமாற்றங்களை அனு மதிக்கும் தனிநபர் கணிப்பு/தகவல் தொடர்பு கட்டமைப்புகளுக்கான பொதுவான பெயர்.

video window : ஒளிக்காட்சிச்சாளரம்: கணினி ஒரு தனிச் சாளரத்தில் காட்டப்படும் என்.டி.எஸ்.சி. ஒளிக் காட்சி (டி.வி).

vidicon : விடிக்கோன்: ஒரு தொலைக் காட்சி ஒளிப்பதிவுக் கருவியினுள் இருக்கும் குழாய். இது ஒரு காட்சியின் உருக்காட்சியை மின்னியல் சைகையாக மாற்றுகிறது.

view :காட்சி : ஒரு தகவல் தளத்தின் உள்ளடக்கங்களை பயன்பாட்டாளருக்கு வழங்குகின்ற முறை. இது, தகவல் தளத்தில் புலங்களும், பதிவுகளும் சேமித்து வைக்கப் பட்டுள்ள அதே முறையில் காட்சியில் காட்டப்பட வேண்டியதில்லை. பல்வேறு பயன்பாட்டாளர்களின் தேவைக் கேற்ப தனித்த முறையில் காட்டப் படுகிறது.

viewdata : காட்சித் தகவல் : மனைத் தகவல் வழங்கீட்டுப் பொறியமைவு. இதன் வழியாகப் பயன்பாட்டாளர்கள், ஒரு மையத் தகவல் தளத்தை தங்கள் உள்ளூர் தொலைக் காட்சிகளிலிருந்து அணுகலாம். பயன்பாட்டாளர் குறிப்பிட்ட தகவல் சட்டகங்களைக் கோரலாம். முக்கியமாக, தாங்கள் விரும்பும் தகவல்களை நேரடியாக அணுகலாம். இதனால் நேரம் மிச்சமாகிறது. இந்தப் பொறியமைவின் வாயிலாகப் பயன்பாட்டாளர் வேறு பயன்பாட்டாளர் களுடன் செய்தித் தொடர்பு கொள்ளலாம்.

viewport : காட்சித்துறை : ஒளிப்பேழைக் காட்சித்திரையில் தெரிந்தெடுத்த ஓர் அமைவி டத்தில் தெரிந்தெடுத்த படம் எதையும் பயன்பாட் டாளர் வைப்பதற்கு அனுமதிக்கிற செய்முறை.

virtual : தோற்றநிலை; உண்மை போன்ற, மெய்நிகர்: தோற்ற நிலைச் சேமிப்பகத்தில் உள்ளது போன்று இயல்பாகவுள்ள நிலையாக இல்லாமல் கண்ணுக்குத் தோன்றுகிற நிலை.

virtual address : தோற்றநிலை முகவரி: தோற்றநிலைச் சேமிப்புப் பொறியமைவுகளில் தோற்ற நிலைச் சேமிப்பைக் குறிக்கிற ஒரு முகவரி. எனவே, இது, பயன்படுத்தப்படும் போது, இயல்புச் சேமிப்பு முகவரியாக மாற்றப்பட வேண்டும்.

virtual drive : மெய்நிகர் வட்டகம்: ராம் வட்டகம் என்றும் கூறப்படும். வட்டு இயக்கியைப் போன்று நினைவகத்தின் ஒரு பகுதி பயன்படுத்தப் படும். வட்டைவிட நினைவகத்தி லிருந்து கணினி வேகமாகப் படிக்க முடியும் என்பதால் மெய்நிகர் வட்ட கங்கள் வேகமானவை. இருப்பினும், கணினியை நிறுத்தினாலோ அல்லது மீண்டும் துவக்கினாலோ ராம் வட்டகத்தில் உள்ள தகவல் மறைந்து போகும்.

virtualize : மாயபடுத்து; மெய் நிகராக்கு: மெய்நிகர் நினைவகத்தில் ஆணைத்தொடரை இயங்க வைத்தல்.

virtual machine : மெய்நிலை எந்திரம்; திரம்;மெய்நிகர் எந்திரம்: ஒரேசமயத்தில் ஓடும் தற்போதையக் கணினியின் பல படிகள் உள்ளதாகத் தோன்றும் பொய்த் தோற்றம்.