பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

word wra

727

World


 'word wrap: சொற் பொதிவு ; சொல் மடிப்பு : ஒரு சொல், மூலவரிகளின் இறுதியில் பொருந்தவில்லை யென்றால் அதனை தானாகவே அடுத்த வரியின் தொடக்கத்திற்கு நகர்த்தி விடுகிற சாதனம். இது சொல் செய் முறைப்படுத்தும் பொறியமைவு களில் காணப்படும்.

work area : பணி இடப் பரப்பு.

workbench : பணி மேசை; பணிமேடை வன்பொருள் மற்றும் மென் பொருள் இனங்களைப் பல பயன் பாட்டாளர்கள் பகிர்ந்து கொள்ள இடமளிக்கும் செயல்முறைப்படுத்தும் சூழல்.

work breakdown structure: பணி முறிவுக்கட்டமைவு; பணிப்பகுப்புக்கட்டமைவு : ஒரு குறிப்பிட்ட திட்டத்தை முடிப்பதற்குத் தேவைப்படும் பணிக் கூறுகளையும் சாதனங்களையும் விரிவான பட்டியலாகத் தயாரித்தல். திட்டமிடும் செய்முறையை விரைவு படுத்தத் திட்ட வரைவாளருக்குப் பயன்படும் சாதனம்.

work group : பணிக்குழு: கோப்புகளையும் தகவல் தளங்களையும் பங்கிட்டுக் கொள்ளும் இரண்டு அல்லது மேற்பட்ட தனி நபர்கள். பணிக் குழுவை ஒட்டி அமைக்கப்படும் 'லேனில் மின்னணு தகவல்களைப் பங்கிட்டுக் கொள்ள முடியும்.

work group computing : பணிக்குழு கணிப்பு : பணிக்குழு சூழ்நிலையில் இறுதிப் பயனாளர் கணிப்பிடல். இதில் தங்களது வன்பொருள் மென் பொருள் மற்றும் தகவல் தளங்களை குழுவின் வேலைகளுக்காக லேன் முறையில் பணிக்குழுவின் உறுப்பினர் எவரும் பயன்படுத்தமுடியும்.

working directory : பணியாற்றும் கோப்பகம் :: தகவல் மாற்றல்களுக்காக நடப்பில் பயன்பட்டு வரும் விவரத் தொகுப்பு.

working storage செயற்படு சேமிப்பகம் : தற்காலிகச் சேமிப்பகம் என்பதும் இதுவும் ஒன்றே.

worksheet : பணித்தாள்: விரிதாள், திட்டத்தாள் என்பனவும் இதுவும் ஒன்றே.

worksheet compiler : பணித்தாள் தொகுப்பு; spread sheet போன்றதே.

workspace : பணியிடம் : செயற்பாட்டுச் சேமிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள செயல்முறை களுக்கும் தகவல்களுக்குமான உள்முக சேமிப்பு அளவினைக் குறிக்கும் சொல்.

workstation : பணி நிலையம் : ஒரே சமயத்தில் ஒருவரே பயன்படுத்து வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கணினிச் சாதனங்களின் தொகுதி. இது, ஒரு கணினியுடன் இணைக் கப்பட்ட ஒரு முனையமாகவோ, உள்முகச் செய்முறைப்படுத்தும் திறனுள்ள தனித்தியங்கும் பொறியமை வாகவோ இருக்கலாம். எடுத்துக் காட்டு:தனித்தியங்கும் வரைகலைப் பொறியமைவு சொல் செய்முறைப் படுத்தி; நேரப்பகிர்வு முனையம்.

work year : பணியாண்டு : ஓர் ஆள் ஓராண்டு செய்துள்ள முயற்சிகள். ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து முடிக்க எத்தனை ஆட்கள் தேவைப்படும் என மதிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்.

World Conference on Computer in Education (WCCE) : கல்வியியல் கணிப்பொறி பற்றிய உலக மாநாடு : பன்னாட்டுத் தகவல் செய்முறைப் படுத்தும் இணையமும், அமெரிக்கத் தகவல் செய்முறைப்படுத்தும் கழகங்களும் இணைந்து நடத்தும் பன்னாட்