பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X-Y

731

X-Y plo



எல்லா பணிநிலைய விற்பனை யாளர்களின் ஆதரவும் பெற்றது.

XY chart: எக்ஸ்-ஒய்வரைபடம்: ஒரு தகவல் தொடரை ஒரு நேர அச்சு இல்லாமல் இன்னொரு தகவல் தொடருக்கு எதிராக வரைவதற்கு அனுமதிக்கிற வடிவம். இது இரு தொடர்களுக்கு மிடையில் இணைத்தொடர்பு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது.

XYplotter : எக்ஸ்-ஒய் வரைவி: ஒரு காகிதத்தில், கணினி மூலம், எக்ஸ், ஒய் ஆயத்தொலைவுகள் அடிப்படையில் புள்ளிக் கோடுகளை அல்லது வளைகோடுகளை வரையும் வெளிப்பாட்டுச் சாதனம்.