பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Z

733

zero




Z

Z-இஸட்: தடையின்தன்மை. பூஜ்ய துண்மியைக் குறிப்பிடும் சொல்.

Z-80 : இசட்-80: பிரபல 8 துண்மி நுண் செய்முறைப்படுத்திச் சிப்பு. இது நுண்கணினி களில் தளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

Z-address : z-முகவரி : பெரு சேமிப்பக அமைப்பில், தனித்த சிற்றறை முகவரியின் தன்மை. ஒரு குறிப்பிட்ட சிற்றறைப் பெட்டி இருக்கும் சுவற்றை இது காட்டுகிறது.

zairia : ஜைரியா : ஆதி அரபுச் சோதிடர்கள் உருவாக்கிய சிந்திக்கும் எந்திரம்.

zap அழி : 1. தகவல்தள கோப்பிலுள்ள தகவல்கள் அனைத்தையும் மீட்க முடியாதவகையில் அழித்து விடுகிற ஆணை. இது பல தகவல்தள செயல்முறைகளில் உள்ளது.

zap disk : அழி வட்டு : விஎம் செயலாக்க அமைப்பில் உள்ள மெய்நிகர் வட்டு. விடாம் (VTAM) குறியீட்டில் பயனாளர் எழுதும் மாற்றங்களைக் கொண்டுள்ளன.

Z-axis : z-அச்சு. ஓர் ஆயத்தொலை வுத் தளத்தில், ஆழத்தைக் குறிப்பிடும் அச்சு. இது, எக்ஸ்-அச்சு, ஒய்அச்சு என்பவற்றிலிருந்து வேறு பட்டது.

z-buffer : z இடையகம்; z தாங்கி: அய்க்ஸ் AIX செயலாக்க அமைப்பில் இசட்-மதிப்புகளை சேமிக்கும் நினைவகத்தின் பகுதி. பார்வை யாளர் கண்ணுக்கும் படப்புள்ளிக் கும் இடையிலான தூரம் அல்லது ஆழத்தைக் கொடுக்கிறது.

z-disk : இசட்-வட்டு : சிஎம்எஸ் என்னும் உரையாடல் முகப்பு அமைப்பின் வட்டு விரிவாக்கம்.

Zeo-பூஜ்யம்; சுழி : பொதுவாக அளவின்மையைக் குறிப்பிடும் எண். பல கணினிகளில், நேர் மற்றும் எதிர் பூஜ்யங்களுக்குத் தெளிவான குறியீடுகள் உள்ளன.

zero address instruction : பூஜ்ய முகவரி ஆணை : முகவரி பகுதியே இல்லாத எந்திர ஆணை.

zerofil : பூஜ்யநிரப்பல்; சுழி நிறைவு.

zeroflag: பூஜ்யக்கொடி; சுழிக் கொடி: ஓர் ஆணை பூஜ்ய மதிப்பளவைக் கொண்டிருக்கும் போது, தருக்க 1-க்குச் செல்கிற ஏற்ற இறக்கத் துடிப்பு.

zeroize : பூஜ்யமாக்கல் : ஒரு செயல் முறையைப் பூஜ்யங்களுடன் தொடக்கம் செய்தல். நினைவகத்தில் இடை வெளிகளைப் பூஜ்யங்களால் நிரப்பு தல்.

z-force : இசட்-விசை : ஒரு தொடு திரையின் அழுத்தும் உணர்வு.

z-format : இசட்-வடிவமைப்பு: படப் புள்ளியின் வடிவமைப்பு. வருடியின் வரிசையில் படப்புள்ளி மதிப்புகளின் தொகுதியாக ஒருங்கி ணைத்தல். AIX செயலாக்க அமைப்புடன் தொடர்புள்ளது.

zero matrix : பூஜ்யமேட்ரிக்ஸ்: செல்லாத மேட்ரிக்சின் வேறொரு பெயர்.

zero mode : பூஜ்ய முறை : இலக்க முறை வரைவியை இயக்கும் முறை. இதில் ஒவ்வொரு உள்ளிட்டுக் கட்டளையும் ஏற்றத்தைக் குறிப்பிடு வதுடன் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு அச்சுகள் தொடர்பான வேக மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

zero phase filter : பூஜ்ய நிலை வடிகட்டி : இரட்டைப்படை எண் மாதிரிகளைப் பயன்படுத்தும் ஒரு வடிகட்டி. மாதிரியின் நடு உள்ளிட்