பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zero poi

734

zilog


 டைப் போன்ற அதே இடத்தில் உள்ள வெளியீட்டை அளிக்கிறது.

zero point : பூஜ்ய புள்ளி : வென்ச் சுராவின் செங்குத்து மற்றும் குறுக்கு வாட்டக் கோடுகளின் மீதுள்ள 'சி' விளக்கங்களின் குறுக்கிணைப்பு.

zero point intersection: பூஜ்ய புள்ளி குறுக்கிணைப்பு : வெளியீட்டு விண் டோவின் மேல் இடது மூலையில் குறுக்கே சந்திக்கின்ற கோடுகள்.

zero punch : பூஜ்யதுளை:ஹொலரித் துளை அட்டையின் மேலிருந்து மூன்றாம் வரிசையில் போடப்படும் துளை.

zero suppression : பூஜ்ய அமுக்கம்; சுழி ஒடுக்கம் : ஓர் எண்ணில்ருந்து முக்கியமற்ற பூஜ்யங்களை ஒடுக்கி விடுதல் (ஒழித்து விடுதல்). பொது வாக, இது அச்சிடும் செயற்பாட்டுக்கு முன்பு அல்லது செயற்பாட் டின் போது செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டு: 00004763 என்ற இலக்கம் பூஜ்ய ஒடுக்கத்தின் பிறகு 4763 என்றாகிறது. பொதுவாக பக்க எண்ணிடுவதில் கையாளப்படு கிறது. தொடக்கப் பக்க எண்கள், 01, 02... அல்லது 001, 002... என்பதற்குப் பதிலாக 1,2 ... என்று எண்ணப் படுகிறது.

zero track: பூஜ்ய தடம்: சுழித்தடம்: 'பூட்' பதிவேட்டைக் கொண்ட வட்டின் முதல் தடம். மோசமான பூஜ்ய தடம் இருக்கும் வட்டைப் பயன் படுத்த முடியாது. பூஜ்ய தடம் உள்ள வட்டை சீரமைக்கும்போதோ அல்லது படிக்கும்போதோ மோச மான பூஜ்ய தடம், வட்டு பயனில்லை என்று டாஸ் காட்டும்.

zero transmission level reference point; பூஜ்ய அனுப்புநிலை குறிப்புப் புள்ளி : ஒரு மின்சுற்றில் குத்து மதிப்பாகத் தேர்ந்த புள்ளி. அங்கு தான் தொடர்புள்ள எல்லா அனுப்பு தல்களும் குறிப்பிடப்படும்.

zero word: பூஜ்ய சொல்: குறியீட்டுக் கொள்கையில், பூஜ்ய இலக்கங் களை மட்டுமே கொண்ட ஒரு சொல். ஹம்மிங் இடத்தின் ஆரம்பத் தில் இது உள்ளது.

zero-complemented transition coding: பூஜ்ய கூட்டெண்மாறும் குறியீடு: தகவல் சரத்தின் ஒவ்வொரு 0 துண்மிக்கும் அனுப்பப்பட்ட சமிக் ஞையின் நிலையை தலை கீழாக்கி தகவல் குறியீடு அமைத்தல்.

zerofil : பூஜ்ய நிரப்பு : பூஜ்யத்தைக் குறிப்பிடும் எழுத்துகளால் பயன் படாத சேமிப்பு இடங்களை நிரப்புதல்.

zero-slot LAN : பூஜ்ய இட லேன் : தொடர் அல்லது இணை 'போர்ட்'டில் கணினிகளுக்கு இடையில் அனுப்புவதைக் குறிப்பிடுகிறது. 'லேன்' அட்டைகள் பயன்படுத்தும் விரிவாக்க இடம் இதனால் விடுவிக்கப்படுகிறது.

z-fold paper : இசட்-மடிப்புத் தாள் : விசிறி மடிப்புக் காகிதம் அல்லது தொடர் எழுதுபொருளுக்கு மற் றொரு பெயர்.

zig-zag fold paper : சிக்-சாக் மடிப்பு காகிதம் : விசிறி மடிப்புக் காகிதம் அல்லது தொடர் எழுதுபொருளின் வேறு பெயர்.

zilog : சிலாக்: உலகின் முதல் கணினி செயலகச் சிப்பான இசட்-80இன் உற்பத்தியாளர். இந்த சிப்புவால் அமைந்த கணினிசிபிஎம் செயலாக்க அமைப்பில் இயங்கியது. பின்னர் இதைவிட வேகமாகச் செயலாற்றும் இன்டெல் 8080 சிப்பு இதைப்