பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

binary cod 89 binary not

குறிப்பிட முடியாது. ஆனால் பதின் மான எண்ணுக்கு ஒவ்வொன்றுக்கும் இரும முறை எண் உண்டு. எடுத்துக் காட்டாக 264-க்கு இரும எண் 010 01100100.

binary codedoctal : இருமக்குறியீட்டு எட்டிலக்கம் : 3 துண்மிகள் தொகுதி யில் எட்டிலக்க அல்லது எண்ம இலக்கங்களைச் சேமித்தல்.

binarycompatible : இரும ஏற்பமைவு; இரும தகவமைவு ; ஒன்று போலவே இரும வடிவத்தில் உள்ள எந்த ஒரு தகவல் வன்பொருள் அல்லது மென் பொருள் அமைப்பையும் குறிப்பிடு கிறது.

binary counter : இருமக் கணக்ககம் : ஒவ்வொரு உள்ளீட்டுத்துடிப்புடனும் 1 ஈரிலக்கம் சேர்க்கும் கணக்ககம்.

binary device : இருமச் சாதனம் : 1. நிறுத்துதல் அல்லது இயக்குதல் என்று இயங்கும் மின்சார பொத்தா னைப் போன்ற இரண்டு நிலைகளில் பதிவு செய்யும் சாதனம். 2. கணினி அறிவியலில், இரும வடிவில் பதிவு செய்யும் சாதனம் அல்லது அவ்வாறு குறியீடு செய்யப்பட்டதைப் படிக் கும் சாதனம்.

binary digit : இரும இலக்கம் : 'பிட்' துண்மி என்று சுருக்கப் பெயர் அளிக்கப்பட்ட 0 அல்லது 1 என்ற எண்களில் ஏதாவது ஒன்று.

binary encoding : இருமக் குறியீடமைத்தல் : எந்த ஒரு மொழியிலும் எழுத்துத் தொகுதியை இரும வடி வத்தில் குறிப்பிடுதல்.

binary field : இருமப் புலம் : இரும எண்களை மட்டும் கொண்டுள்ள புலம். கணக் கீடுகளுக்காக இரும எண்களை சேமிப்பதையோ அல்லது சொற்றொடர், வரைகலை உருவங்கள், குரல், ஒளிக்காட்சி போன்ற எத்தகைய தகவலையும் வைத்துக் கொள்ளும் திறனுள்ள புலமாகவோ இருக்கலாம்.

binary file : இருமக் கோப்பு: எந்திரக் குறியீட்டில் இருமக் குறியீடுகள் கொண்ட கோப்பு.

binary format : இரும உருவமைவு; இரும வடிவம் : பிசிடி வடிவத்திற்கு மாறாக முழுமையும் இரும வடிவத் தில் சேமிக்கப்பட்டுள்ள எண்கள். தகவல், உரை, படங்கள், வரை கலை, குரல், ஒளிக்காட்சி போன்ற இருமக் குறியீட்டு வடிவத்தில் சேமிக்கப்படும் தகவல் விவரங்களை இழக்காமல் எந்த கோப்பையும் அனுப்பக் கூடிய கோப்பு மாற்றல் குறியீடு.

binary fraction : இரும பின்னங்கள் : ஒவ்வொரு இரும இலக்கம் அதற்கு வலது புறம் வரும் இலக்கத்தைப் போல இரண்டு மடங்கு மதிப்பு கொண்டது. பதின்மப் புள்ளிக்கு முன்போ அல்லது பின்போ இருமக் குறியீட்டு பதின்மமாக வந்தாலும் அதே மதிப்பையே கொண்டிருக்கும். சான்றாக 11-11 என்பது இருமத்தில் 2+1+0.5+0.25 அதாவது பதின்மான எண்ணில் 3.75

binary notation : இரும எண்முறை : இருமக் குறிமானம் 2-ஐ அடிப்படை