பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1001

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1000



சிறு எண்ணிக்கையில் உள்ளீடுகள்/வெளியீடுகளைக் கொண்டிருக்கும். இந்தச் செயலாக்க உறுப்புகள் உள்ளீடுகளின் தன்மையைக்கொண்டு கற்றுக் கொள்ளும் திறன் படைத்தவை. எனவே இதன் மூலம் விரும்பிய வெளியீட்டைப் பெற முடியும். நரம்பணுப் பிணையங்கள் தோரணி உணர்தல், பேச்சுப் பகுப்பாய்வு மற்றும் பேச்சு ஒருங்கிணைவு போன்ற துறைகளில் பயன்படுகின்றன.

. ne. us : . என்இ. யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் நெப்ரஸ்கா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

neutral network computers : நரம்பணு பிணையக் கணினிகள்; நியூரான் பிணையக் கணினிகள் : மின் சுற்றுக்கள் உள்ள பரிசோதனை எந்திரங்கள். மனித மூளையின் நியூரான்கள் அல்லது நரம்பு செல்களிடையே உள்ள இடை பிணைப்புகளை ஒட்டி வடிவமைக்கப்பட்டது.

new : புதிது.

newbie : புதுமுகம் கற்றுக்குட்டி : 1. இணையத்தில் அனுபவமில்லாத பயனாளர். 2. ஏற்கெனவே அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளுக்கான பகுதியில் விளக்கங்கள் இருந்தபோதும் அதைப்பற்றி அறியாமல் அதே தகவலை ஐயமாகக் கேட்கும் அனுபவமில்லாத யூஸ்நெட் பயனாளர் குறித்து கிண்டலாகக் கூறப்படும் சொல்.

new card : புதிய அட்டை, புதுஅட்டை.

new century schoolbook : புதிய நூற்றாண்டு பள்ளி நூல் : பாட நூல்கள் மற்றும் பருவ இதழ்களுக்காக உருவாக்கப்பட்டது. எளிதாகப் படிக்கக் கூடிய எழுத்தச்சின் முகம்.

new database : புதிய தரவுத்தளம்.

new file : புதுக் கோப்பு.

newline : புதுவரி : ஆவணத்தில் தட்டச்சு, செய்யும்போது ஒரு வரி முடிந்து புதிய வரி தொடங்குகிறது என்பதை உணர்த்தும் குறியீடு முந்தைய வரியின் இறுதியில் அமையும்.

newline character : புதிய வரி எழுத்து|குறியீடு : திரைக்காட்சி

அல்லது அச்சுப்பொறியில் காட்டியை அடுத்த வரியின் தொடக்கத்துக்கு நகர்த்தும் கட்டுப்பாட்டுக் குறியீடு. செயல்பாட்டளவில் புதியவரிக்