பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1014

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1013


normal form

1643

Nor operation

அனைத்தும் இயற்கையாக ஏற்படும் சிறப்பியல்புகளுக்கும் உண்டு. ஒரு பள்ளியில் குறிப்பிட்ட வகுப்பில் படிக்கின்ற மாணவர்களின் உயரம், ஒரு குறிப்பிட்ட நிலை வட்டின் உழைக்கும் நாட்கள், மக்கள் தொகையில் ஒரு நபர், ஒரு ஆண்டுக்குப் பயன்படுத்துகின்ற பெட்ரோலின் அளவு ஆகியவற்றை இதற்குச் சான்றாகச் சொல்லலாம். இந்த போக்கே வழக்கமான விநியோகம் எனப்படுவதை உருவாக்குகிறது. வரைபட அமைப்பில் ஒரு வழக்கமான விநியோகமானது மணி வடிவ வளைவை உருவாக்கும்.

normal form : இயல்பான வடிவம் : பதின்மப் புள்ளி எண்ணைக் குறிப்பிடுவது. இதில் பின்னப் பகுதியின் மிக முக்கிய இலக்கம் சுழி (பூஜ்ய) யாகவே இருக்கும்

normalization : இயல்பாதல் : தொடர்புமுறை தரவுத் தள மேலாண்மையில் திறமையான செயலாக்கத்திற்காக தரவுகளை பதிவேடு குழுக்களாகப் பிரிக்கும் செயல்முறை. இதில் ஆறு நிலைகள் உள்ளன. மூன்றாவது நிலையில் (மூன்றாவது வழக்கமான வடிவம்) பதி வேட்டிலுள்ள முக்கிய புலத்தினால் மட்டுமே தரவு அடையாளம் காட்டப்படுகிறது. சான்றாக நிரலிடம் தரவுவை அடையாளம் காண்பது, நிரல் எண், வாடிக்கையாளர் தரவு, வாடிக்கையாளர் எண்.

normalize : இயல்பாக்குதல் : ஒரு மாறியல் எண்ணளவின் அடுக்குக்குறி எண்ணையும் பின்னத்தையும் சரியமைவு செய்தல். இதன்படி பின்னம் வகுத்துரைக்கப்படும் ஒர் அளவெல்லைக்குள் இருக்குமாறு செய்யப்படும்.

normai termination : இயல்பான முடிப்பு : End அல்லது stop போன்ற நிறுத்தும் சொல். ஒரு நிரல் தொடரை முடிக்கும் செயல்.

normal video : இயல்பான ஒளிக்காட்சி : கறுப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துகளைக் காட்டும் முறை.

normal view button : இயல்பான காட்சிப் பொத்தான்.

normal wear : இயல்பான தேய்மானம் : சராசரியான, அன்றாட பயன்பாட்டினால் ஒரு பொருளின்மீது இயற்கையான சக்திகள் ஏற்படுத்தும் சீர்கேடு.

Nor operation : இல் அல்லது வாயில் செயலாக்கம்.