பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1015

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1014


Norton antivirus 1014

ΝΟΤ

Norton antivirus : நார்ட்டன் ஆன்டி வைரஸ். நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருள்.

norton commander : நார்ட்டன் கட்டளை : பீசிக்கான கூட்டு மேலாண்மைப் பயன்பாட்டு நிரல் தொடர்கள்.

norton editor நார்ட்டன் தொகுப்பி : பீட்டர் நார்ட்டன் என்பவரால் பீசிக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு உரைத் தொகுப்பி.

norton index : நார்ட்டன் அடைவு : நார்ட்டன் அட்டவணை : கணினி வன்பொருள்/ மென்பொருள் செயலாக்க வேகத்தினை மதிப்பிடக்கூடிய பல முறைகளில் ஒன்று Ni என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.

nortor. Sl : நார்ட்டன் எஸ்.ஐ : Norton System Information என்பதன் குறும்பெயர். கணினி செயல்பாட்டை அளக்கும் நார்ட்டன் பயன்பாடு. கணிப்பு அடைவு (சி.ஐ) மூலம் மையச் செயலக வேகத்தையும் வட்டு அடைவு (டி.ஐ) மூலம் வட்டின் வேகத்தையும் செயல்பாட்டு அடைவில் (பி.ஐ) சி.ஐ, டி.ஐ. ஆகிய இரண்டையும் கலந்தும் தரும். ஐ.பி.எம். எக்ஸ். டி. இதற்கு ஒரு குறிப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

norton utilities : நார்ட்டன் பயன்பாடுகள் : சிமான்டிக் கார்ப்பரேஷன் உருவாக்கிய பீசி, மெக்கின்டோஷ்களுக்கான வட்டு மேலாண்மை பயன்பாட்டு நிரல் தொடர்கள். கோப்புகளைத் தேடித் தொகுத்தல், கோப்புகளை நீக்காமை, சேதமான கோப்புகளை திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கான நிரல் தொடர்கள் இதில் அடங்கும். பீட்டர் நார்ட்டன் கணிப்பி நிறுவனம் உருவாக்கிய இத்தகைய நிரல் தொடர்கள்தாம் பீசிக்கான வட்டு பயன்பாடுகளை புகழடையச் செய்தன. குறிப்பிட்ட பணிக்கேற்ற தேவையற்ற தன்மைகள் இல்லாத வேகமான பயன்பாடுகளின் தொகுதியே அவை.

NOS : நாஸ் : Network operating System என்பதன் குறும்பெயர். ஒரு பிணையத்தில் அனுப்புவதைக் கட்டுப்படுத்தும் மென்பொருள்.

NOT : எதிர் : இது ஒரு தருக்க முறை இயக்கி. இதில் 'P' என்பது ஒர் அறிக்கை, எனில் 'P' பொய்யான தென்றால் 'P'-இன் 'எதிர் உண்மையாகும்; 'P'