பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1030

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

OC3

1029

octal numeral


தாகவே மாற்றுவதைக் குறிப்பது.வழக்கமாகப் பயன்படுத்தி தேய்ந்து பழுதாவதைக் குறிப்பதல்ல. தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக அண்மையில் பொருள்கள் வருவதால் இவற்றை மாற்ற வேண்டியதாகியுள்ளது.

OC3 : ஓசி3 : ஒளிவச் சுமப்பி 3 என்று பொருள்படும் Optical Carrier 3 என்பதன் சுருக்கம்.சோனட் (SONET) எனப்படும் அதிவேக ஒளியிழை தரவு பரப்பு அமைப்புகளில் பயன் படுத்தப்படும் ஒளிச்சமிக்கை மின்சுற்றுகள் பலவற்றில் இதுவும் ஒன்று.ஓசி3 வினாடிக்கு 155.52 மெகாபிட் சமிக்கைகளைச் சுமந்து செல்கிறது.சோனட் மற்றும் ஐரோப்பிய முறையான எஸ்டிஹெச் இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட இந்த வேகம் குறைந்தபட்ச வேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

occam : ஓசிசிஏஎம் : ஒரே நேரத்திய இயக்கங்களைக் கையாளப் பயன்படுத்தப்படும் இணை செயலாக்க மொழி.

OCR : ஓசிஆர் : "ஒளியியல் எழுத்தேற்பு" என்று பொருள்படும் "Optical character recognition" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் குறும்பெயர்.

octal : எண்மி;எண்ம; எண்ணிலை;எட்டு என்னும் இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு எண்மான முறை.இந்த எண்மி இலக்கங்கள் பெரும்பாலும் ஈரிலக்க எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.இதில், ஒவ்வொரு எண்மி இலக்கமும் மூன்று ஈரிலக்க இலக்கங்களின் (துண்மிகள்) ஒரு தொகுதியைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டு : 111000010001101 என்னும் ஈரிலக்க எண்ணை, 70215 என்னும் எண்மி எண்ணாகக் குறித்துக் காட்டலாம்.ஈரிலக்க எண்ணை எண்மி எண்ணாக மாற்றலாம்.

octal digit : எண்ம இலக்கம்.

octal dump : எண்மி சேமிப்பு.

octal notation : எண்மக் குறிமானம்.

octal number : எண்ம எண்.

octal number systems : எண்மி எண்மான முறை.

octal numeral : எண்மி இலக்கம்;எண்ம இலக்கம்;எண்ம உரு : ஒரு தொகையினைக் குறிக்கின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கங்கள் கொண்ட எண்.இதில் ஒவ்வொரு இலக்கமும் குறிப்பிடும் எண் அளவு "8" என்னும் மூலத்தை