பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1039

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

online database

1038

online processing


வைய விரிவலை ஆகியவற்றின் பயனாளர்களைக் கொண்ட தொகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. 2.தம் அரசாங்கம் பற்றியும், பொது மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகள் குறித்தும் நிகழ்நிலை அரசியல் மன்றங்களில் விவாதத்திற்காக எடுத்து ரைக்கின்ற மக்கள் குழு.3.ஒரு குறிப்பிட்ட செய்திக் குழு, அஞ்சல் பட்டியல், எம்யுடி, பிபிஎஸ் மற்றும் பிற நிகழ்நிலை மன்றத்தை அல்லது குழு வைச் சேர்ந்த உறுப்பினர்கள்.

online database : நேரடித்தரவுத் தளம்;உடன் நிகழ் தரவுத் தளம் : ஒரு முனையத்தில் பெரும் பாலும் ஒரு காட்சிச் சாதனத்தில் ஒரு பயனாளர் நேரடியாக அணுகக்கூடிய தரவுத் தளம்.

online fault-tolerant system : நேரடிப் பிழைதாங்கு பொறியமைவு : உடனடி பிழை பொறுதி அமைப்பு : மென்பொருள் பிழைகள் இருந்தபோதிலும் சரியாகச் செயற்படுகிறவாறு வடி வமைக்கப்பட்ட கணினியமைவு.

online fonts : நிகழ்நிலை எழுத்துருக்கள்.

online help : நேர்முக உதவி : திரையில் வரும் நிரல்.நிரலாக்கத் தொடரின் உள்ளே இருந்து உடனடியாக வருவத

online information service : நிகழ்நிலைத் தகவல் சேவை : தரவுத் தளங்கள், கோப்புக் காப்பகங்கள், கலந்துரையாடல் குழுக்கள் மற்றும் இதுபோன்ற அமைப்புகளிலுள்ள தகவல்களை தொலைபேசி அல்லது தனித்த தகவல் தொடர்பு இணைப்பு அல்லது இணையம் வழியாக அணுகு வதற்கு வசதி செய்துதரும் வணிகமுறை. பெரும் பாலான நிகழ்நிலை தகவல் சேவை நிறுவனங்கள் தத்தமது சொந்த சேவைகளை மட்டுமின்றி பொது வான இணையத் தொடர்பையும் வாடிக்கையாளர் களுக்கு அளிக்கின்றன.அமெரிக்கா ஆன்லைன், காம்பு செர்வ், மைக்ரோசாஃப்ட் நெட் வொர்க் ஆகியவை அமெரிக்காவில் நுகர்வோருக்கான மிகப் பெரும் நிகழ்நிலைத் தகவல் சேவை நிறுவனங்கள் ஆகும்.

online problem solving : நேரடிச் சிக்கல் தீர்வு ;உடனடிச் சிக்கல் தீர்வு : ஒரு கணினியமை வினைப் பல பயனாளர் சேய்மை முனையங்க ளிலிருந்து ஒரே சமயத்தில் பயன்படுத்து கையில் சிக்கல்களை நேரடியாகத் தீர்ப்பதற்கான தொலைச் செய்முறைப் பயன்பாடு.இத்தகைய பயன்பாட்டில் ஒரு