பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1055

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

OR operator

1054

OS/2


மொழி முறையில் அமைந்துள்ளன. எனவே பயன்படுத்துபவர் மறுமொழி முறையிலே இருத்தல் வேண்டும்.

OR operator : "அல்லது" இயக்கி : தருக்க முறை இயக்கி என்பது ஓர் அறிக்கை, 'Q'என்பது இன்னொரு அறிக்கை என்றால், P+Q என்பதன் "அல்லது" (OR) என்பது, குறைந்தது ஒன்று உண்மையாக இருந்தால் மட்டுமே உண்மையானதாகும்;எல்லாம் பொய் எனில் பொய் யானதாகும் என்பதைத் தெரிவிக்கும் தன்மையுடையது.

orphan : அனாதை வரி : தொடக்கத் தனி வரி : ஒரு வாசகத்தின் ஒரு பக்கத்தின் அடியில் தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் ஒரு பத்தியின் முதல்வரி. இது எல்லா அச்சு வடிவங்களிலும் விரும்பத்தகாததாகக் கருதப்படுகிறது.

orphan file : உறவிலிக்கோப்பு : அனாதைக் கோப்பு : கணினிச் சேமிப்பில் பயனற்றுப் போன பின்பும் தங்கிவிட்ட ஒரு கோப்பு. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட பயன்பாடு செயல்படுவதற்கு உதவியாக உருவாக்கப்பட்ட கோப்பு, அந்தப் பயன்பாடு கணினியிலிருந்து நீக்கப்பட்டபின் அனாதை ஆகிவிடுகிறது.

orth oferrite : ஆர்த்தோ ஃபெரைட் : இது இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருள். இது எதிர்காந்தத் துருவமுனைப்பின் பாம்பு போன்று நெளிந்த மாற்றுப் புலங்களைக் கொண்டதாகும். இது காந்தக் குமிழ் நினைவகத்துக்குப் பயன் படுத்தப்படுகிறது.

orthographic : எழுத்துக்கூட்டு முறை : அச்சு விரிவமைப்பு ஓவியம் அல்லது நிலப்படத்தின் அச்செழுத்து முறை. இதில் முனை நீட்டிக் கொண்டிருக்கும் வரிகள் ஓவியம் அல்லது நிலப்படத்தின் தளப்பரப்புக் குச்செங்குத்தாக இருக்கும்.

.Or. us : ஓ. ஆர். யு. எஸ் : ஓர் இணையதள முகவரி அமெரிக்க நாட்டின் ஒரிகான் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

OS : ஓஎஸ் : இயக்க முறைமை : "செயற்படு பொறியமைவு" எனப் பொருள்படும் 'Operating System' என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்.

os/2 : ஓஎஸ்/2 : ஐபிஎம் நிறுவனத்தின் இயக்க முறைமை. தொடக்க காலத்தில் ஐபிஎம், மைக்ரோசாஃப்ட் இரண்டின் கூட்டுத்திட்டப் பணியாய் இருந்தது. பின்னாளில்