பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

attached processor

105

ᎪᎢX


பெறுபவர் பயன்படுத்தும் மின்னஞ்சல் தொகுப்பு இந்த ஆவணங்களை மீண்டும் மூல வடிவுக்கு மாற்றும் திறன் படைத்ததாக இருக்க வேண் டும். இல்லையேல் அதற்கென உள்ள மென்பொருளை பயன் படுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும்.

attached processor : உடனிணை; இணைக்கப்பட்ட செயலி : வேலைகளைச் செய்வதில் உதவுவதற்காக ஒரு தலைமை கணினியுடன் இணைக்கப்பட்ட செயலி. பல் செயலாக்கச் சூழ்நிலையில், தலைமை செயலக அமைவுடன் சேர்க்கப்பட்ட கூடுதல் மையச் செயலகம். தலைமைச் செயல் அமைவுடன் சேர்ந்து செயல்பட்டு கணினி அமைப்பின் மென்பொருள் மற்றும் வெளிப் புறச் சாதனங்களைப் பகிர்ந்து கொள்கிறது.

attachment : உடனிணைப்பு.

attachment encoding : உடனிணைப்புக் குறி முறையாக்கம்.

attended operations கவனிக்கப்பட்ட செயற்பாடு; கவனிக்கப்பட்ட செயலாக்கம்.

attention key : கவன விசை : கணினி முனையத்தில் உள்ள ஒரு பணி விசை. அப்போது செய்து கொண்டிருக்கிற வேலையில் தடையிடுமாறு, கணினிக்கு இது சமிக்கை அளிக்கும்.

attenuation : தேய்வு : சமிக்கை ஒன்றின் அளவு அது கட்டுப் பாட்டு அமைவு வழியாகச் செல்லும் பொழுது குறைதல்.

attrib : அட்ரிப் : டாஸ் கட்டளைகளில் ஒன்று. ஒரு கோப்பின் பண்புகூறை மாற்றுவது.

attribute : பண்புக்கூறு : 1. மாறிலி ஒன்றைக் கணினி கையாளும் முறை. 2. தரவு மாதிரி ஒன்றின் இனங்காட்டும் பண்பு. தரவு அமைவு ஒன்றின் அடிப்படை அலகு. 3. ஒரு கருவி ஒன்றின் பண்பு.

attribute byte : பண்புக்கூறு பைட் : வட்டுக் கோப்பில் உள்ள சேமிக்கப்பட்ட தரவைக் குறிப்பது. அக் கோப்பில் உள்ள பண்புகூறுகளை இது குறிப்பிடுகிறது.

attribute inheritance மரபுரிமப் பண்பு : பண்புக் கூறு; மரபுரிமம்.

attribute representations பண்புக் கூறு உருவகிப்புகள்.

ATx : ஏடிஎக்ஸ் : 1995ஆம் ஆண்டில் இன்டெல் நிறுவனம்

அறிமுகப்படுத்திய தாய்ப்பலகை யின் கட்டமைப்புகள் தொடர்