பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1061

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

output unit

1060

overlap


output unit : வெளியீட்டகம்;வெளிப்பாட்டகம் :

outputting : வெளிப்பாடு செய்தல் : பயனுள்ள தகவல்களின் வெளிப்பாட்டினை உண்டாக்குகிற செய்முறை.

outsourcing : வெளித்திறன் பெறல் : வெளிப்புற ஆலோசர்கள், மென்பொருள் இல்லங்கள் அல்லது சேவை அலுவலகங்களுடன் ஒப்பந்தம் செய்து அமைப்பு ஆய்வு நிரல் தொடரமைத்தல் மற்றும் தரவுமைய இயக்கங்களைச் செய்தல்.

Oval : நீள்வட்டம்.

oval shape : நீள்வட்ட வடிவம் : முட்டை வடிவம்.

overdrive : ஓவர்டிரைவ் : இன்டெல்லின் 486 மேம்படுமையச் செயலகம்.

overdrive socket : கூடுதல் இயக்ககப் பொருத்துவாய்.

overflow : ததும்பல் : வழிதல்;மிகைமதிப்பு : ஒரு கணிதச் செயற்பாட்டில் பதிவேட்டில் அல்லது சேமிப்பு அமைவிடத்தில் அதன் கொள்திறனுக்கு மீறிய அளவில் ஓர் எண்ணளவினை உண்டாக்கு தல்.

over flow, arthmetic : கணக்கீட்டு வழிவு.

overflow error : பொங்கிவரும் பிழை : கணக்கிடப்பட்ட தரவு ஒதுக்கபபட்ட புலத்துக்குள் பொருந்தவில்லையென்றால் ஏற்படும் பிழை. முடிவு பலம் காலியாக விடப்படும் அல்லது பிழை நிலையைக் காட்டும் சில குறியீடு செய்யப்படும்.

overhead : தாங்கா சுமை;மேற்செலவு : 1. ஒரு செயல்முறையை அல்லது சாதனத்தை அதன் உயர்ந்தஅளவுத் திறம்பாட்டுக்குக் குறைவாகச் செயற்படும்படி செய்யும் மட்டுமீறிய காரணிகளைக் குறிக்கும் சொல். 2. செயற்பாட்டுப் பொறியமைவும் செயல்முறையும் ஆக்க முறையான பணிகளைவிட நிருவாகப் பணிகளைச் செய்கிறபோது நடைபெறும் ஆக்க முறையல்லாத முயற்சி.

overlap : மேலழுந்துதல்;உடன் நிகழ்தல் : ஒரு செயலினைச் செய்துகொண்டிருக்கும் அதே சமயத்தில் வேறொரு செயலினையும் செய்யும்படி செய்தல். எடுத்துக்காட்டு : மையச் செயலகம் அலகு நிரல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது ஓர் உட்பாட்டுச் செயல்பாட்டினைச் செய்தல். ஒரே சமயத்தில் கணினி பல செயல்முறைகளை நிறைவேற்ற இம்முறை அனுமதிக்கிறது.