பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1079

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paragraph

1078

parallel algorithm


paragraph : பத்தி : ஒரு தருக்க முறைச் செய்முறைத் தொகுதியாக அமைந்துள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோபால் மொழி (Common Business Oriented Language COBOL) வாக்கியங்களின் தொகுதி. இது ஒரு பெயரின் பத்தித் தலைப்புக்கு முந்தியதாக அமைந்திருக்கும்.

paragraph assembly : பத்தி இணைப்பு : ஒரு சொல் செயலியில் அல்லது வட்டுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பத்தியிலிருந்து ஒர் ஆவணத்தை இணைக்கும் செய்முறை.

paragraph number : பத்தி எண் : நினைவகத்தில் உள்ள நிலையை வரையறுக்கும் எண். 16 எட்டியல்களாக நினைவகத்தைக் குறிப்பிடுகிறது. சான்றாக பத்தி எண் 2 என்றால் இரண்டாவது 16 எட்டியல்கள் நினைவகத்தைக் குறிப்பிடுகிறது. இப்பத்தியினை நோக்கி காட்டி திரும்பினால் நினைவகத்தின் 17 எட்டியலை அது காட்டுகிறது என்று பொருள்.

parallel : ஒரு போகு;இணையான : ஒரு சொல்லில் அல்லது செய்தியிலுள்ள ஊடுபொருள்கள் அனைததையும் ஒரே சமயத்தில் கையாள்தல். 2. கணினி வரைகலையில் நேரிணையான புள்ளி ஒவ்வொன்றிலிருந்தும் சமதூரத்தில் இருக்கின்ற ஒரு வரைகலைக் கோப்பில் உள்ள கோடுகளை அல்லது சமதளங்களை இது குறிக்கிறது.

parallel access : ஒரு போகு அணுகுதல்;இணை அணுகல் : ஒரு சேமிப்பிலிருந்து தகவல்களைப் பெறுவதற்கு அல்லது அதில் தகவலை களைச் செலுத்துவதற்கு உதவும் செய்முறை. இதில் இத்தகைய அணுகு தலுக்குத் தேவையான நேரம் ஒரு குறிப்பிட்ட சேமிப்பு அமைவிடத் திலிருந்து ஒரு சொல்லின் ஊடுபொருள்கள் அனைத்தையும் ஒரே சமயத் தில் மாற்றுவதைப் பொறுத்ததாக இருக்கும். இது, தொடர் வரி அணுகுதலுக்கு மாறானது.

parallel adder : ஒரு போகு கூட்டல் கருவி;இணை கூட்டி : ஒவ்வொரு எண்ணளவிலுமுள்ள எல்லா எண்களையும் உள்ளே கொண்டுவந்து செயற் பாடுகளைச் செய்கிற கூட்டல் கருவி. இது தொடர்வரிசைக் கூட்டல் கருவியிலிருந்து வேறுபட்டது.

parallel algorithm : இணை நிலை படிமுறை : ஒரு படி முறையில் ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படிமுறைப்